ஒரு சர்ச்சின் எதிரில் ஒருவர் மதுபானக்கடை திறந்தார். சர்ச் அங்கத்தினர்கள் அதை விரும்பவில்லை.
எனவே தினமும் அந்த மதுக்கடையை அகற்றுவதற்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
சில நாட்கள் கழித்து மதுக்கடை மீது மின்னல் பாய்ந்து அது எரிந்து போனது.
மதுக்கடை உரிமையாளர் சர்ச் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சர்ச்சில் நடத்திய பிரார்த்தனையால்தான் தன் கடை அழிந்தது என்றார். ஆனால் சர்ச் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்தது.
நீதிபதி யோசித்தார்.
இறுதியில், ''இந்த வழக்கில் முடிவெடுப்பது கடினம். ஏனெனில், ஒரு புறம் மதுக்கடை உரிமையாளர் பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் சர்ச் மக்களோ தங்கள் பிரார்த்தனையை நம்ப மறுக்கிறார்கள்'' என்றார்.