ஆற்றில் வெள்ளம் வழிந்து கொண்டிருந்தது.
மக்கள் அதன் நீரை, வேண்டியபடி செலவழித்து விட்டு, தேக்கி வைக்காமல் வீணாகும்படி விட்டு விட்டார்கள்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஆற்றில் வெள்ளம் வற்றிவிட்டது. அதனால் மக்கள், முகம் சுளித்து நின்றனர்.
அப்போது ஆறு, மக்களைக் கூவி அழைத்து, "என் மணலைத் தோண்டுங்கள்; நீர் சுரக்கும். நான் சேமித்து வைத்திருக்கிறேன். வீணாய்ப் போன நீரை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், இந்தக் கவலை தேவையில்லையே...'' என்று சொன்னது.
சேமிப்புப் பழக்கம் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதை இங்கு அனைவரும் உணர்ந்திட வேண்டும்.