கணித ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்:
‘‘மூன்று பூந்தொட்டிகளை, ஒரு முக்கோணத்தின் மூன்று மூலைகளில் வையுங்கள். முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் 1 அடி நீளம். அதாவது மூன்று தொட்டிகளும் ஒன்றுக்கொன்று ஓர் அடி இடைவெளியில் இருக்க வேண்டும்.
‘‘இப்போது நான்காவது தொட்டியை எடுத்து அந்த மூன்று தொட்டிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் அடி தூரத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும். அதாவது நான்காவது தொட்டியிலிருந்து மற்ற மூன்று தொட்டிகளும் ஓர் அடி இடைவெளியில் இருக்க வேண்டும்.
‘‘அவ்வாறு வைக்க நான்காவது தொட்டியை எங்கு வைப்பீர்கள்?’’
விடை தெரியாமல் பலர் விழித்தனர்.
சுட்டியான ஒரு மாணவன் எழுந்து, ‘‘சார், அந்த நான்காவது தொட்டியை, மற்ற மூன்று தொட்டிகளுக்கும் நடுவில் ஓர் அடி உயரத்தில் கட்டித் தொங்கவிடுங்கள்’’ என்றான்.
ஆஹா! இது ஏன் நமக்கு முதலிலேயே தோன்றவில்லை என்று மற்றவர்கள் திகைத்து நின்றார்கள்.