நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த வைரக்கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.
ஏன், நானும் ஒரு கல்தானே என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது:
'ஏ! குறுணிக்கல்லே, காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் பார்க்கத் தெருவில் கிடக்கிறாய். ஆனால், இந்த வைரக்கல் அப்படியா? வைரமாகும்வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை. எங்கோ மண்ணில் மறைந்து அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.
'அப்படியென்றால்...?' என்று இழுத்தது குறுணிக்கல்.
கடப்பாரை சொன்னது: 'நிறைவாகும்வரை மறைவாக இரு'.