ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன.
யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.
பறவை எறும்பைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு மலையை நோக்கிப் பறந்தது.
வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியைத் தொட்டது.
மலை உச்சிக்குச் சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பைத் தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தூரத்தைக் கூடத் தொடவில்லை.
எறும்பைப் பார்த்து பறவை கூறியது
"எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குத்தான் என்று... பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா?"
எறும்பைப் பார்த்துக் கேலி செய்து பறவை நகைத்தது.
வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுயற்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியைச் சென்றடைந்தது.
அப்போது அந்த பக்கமாக மலையைக் கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாகப் பார்த்தது.
அப்போது, அந்தப் பறவையை பார்த்து எறும்பு கூறியது,
“வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவடும், சிலருக்கு தாமதமாகக் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”