உடைந்து போன மண் பானை ஒன்று தெருவில் கிடந்தது.
அந்த வழியே வந்த ஒருவன் அந்தப் பானையின் மேல் காலை வைத்தான். அந்தப் பானை பல சுக்கலானது. மேலும் அதை அவன் மிதித்துத் தூள் தூளாக்கினான்.
உடைந்த அந்தப் பானை அவனைப் பார்த்து, “அன்பனே! இன்று என்னை நீ மேலும் நொறுக்கிவிட்டாய். நான் இந்த மண்ணோடு சில காலம் கிடந்து மண்ணாவேன். ஏனென்றால், நான் மண்ணிலிருந்து வந்தவன். உன் செயலால் எனக்கு எந்த வருத்தமுமில்லை. என் பழைய நிலையை அடைய நீ உதவினாய். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள். நீ ஒரு சமயம் என்னிடம் வரத்தான் போகிறாய். அப்பொழுது இது போல நான் உன்னைப் பல துண்டுகளாக்க மாட்டேன். சிறிது சிறிதாக அரித்து உன்னை இல்லாமலே செய்து விடுவேன்” என்றது.