பிரான்சு நாட்டின் அதிபதியாக நெப்போலியன் ஆட்சி செய்து வந்தார்.
ஒரு நாள் நெப்போலியனின் தளபதிகள் அவருக்கு விருந்து கொடுத்தார்கள்.
இரவு எட்டு மணி.
பழரசக் கிண்ணம் தட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் சொல்லும் தருணம்.
திடீரென்று அதிரடியாக ஒரு குண்டு வெடிக்க வேண்டும். இது முன் ஏற்பாடு. இதை நெப்போலியனைத் தவிர அவருடைய மற்ற தளபதிகள் எல்லோரும் அறிவார்கள்.
முன் ஏற்பாட்டின்படியே குண்டு வெடித்தது.
மற்றவர்கள் கைகளில் இருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் விழுந்து நொறுங்கின. ஆனால் நெப்போலியன் கைக்கிண்ணம் மட்டும் சிறிதும் நடுங்கவில்லை; பழரசமும் ததும்பவில்லை. அவர் அவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தார்.
தளபதிகள், "பிரபுவே, இப்போது வெடித்த குண்டு எங்கள் ஏற்பாடுதான். இது தெரிந்திருந்தும் நாங்கள் ஏமாந்தோம். அதிர்ச்சியில் எங்கள் பழரசக் கிண்ணகளைத் தவற விட்டோம். ஆனால் உங்கள் கை நடுங்கவில்லை. பழரசம் ததும்பவில்லை. எப்படி உங்களால் இவ்வளவு முன் எச்சரிக்கையோடு இருக்க முடிகிறது?’’ என்று கேட்டார்கள்.
நெப்போலியன் புன்சிரிப்பு தவழ, "அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதிகளாக இருக்கிறீர்கள்.’’ என்றார்.
நெப்போலியன் விழிப்புடன் இருந்ததால் எதிலும் அவர் வெற்றி பெற்றார்.