* ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.
* உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
* பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
* வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு... என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.
* மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம்தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.
* அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும்.
* எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும்.
* புண்ணியம் மற்றும் பாவம் என்பன மனம், சொல், செயல் ஆகிய மூன்று வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.
* சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
* வெயிலுக்கு ஒதுங்கும் மரத்தை வெட்டாதே.