* குழந்தையாய் பிறந்து வளர்ந்து சிறுவனாகி வாலிபனாய் மகிழும் நாம் வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை .
* எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே, தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது.
* நம் நற்செயல்களும், நம் தீயச் செயல்களும், நம்மை நிழல் போல ஓயாது தொடர்ந்து வருகின்றன.
* பூக்களின் வாசனை காற்றுடன் மட்டும் தான் செல்லும்; நல்லவர்களின் புகழ் காற்றினையும் எதிர்த்து கடந்து செல்லும்.
* உண்மை பேசுங்கள்; கேட்டவர்க்கு இயன்றதைக் கொடுங்கள்; இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் இடத்தை அடையலாம்.
* அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவுமில்லை.
* ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம், ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று சமாதானம் அடையும் மனதில் இழப்பு இலகுவாகி நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.
* சிந்தனை எதுவோ, அதுவாகவே நீயாகிறாய்.
* சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, ஒரு நாளேனும் பெரு முயற்சியோடு வாழ்ந்திருத்தல் மேலானது.
* அதனதன் தன்மை அறிந்தே நம்பிக்கை வைக்க வேண்டும்.
* நமது உதடுகளை அரண்மனை வாயிற் கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை.
* பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும். தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்.
* அதிகமாக பேசுவதால் மட்டும், ஒருவன் அறிஞனாகி விடமாட்டான்.
* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை; அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.
* எந்தக் காலம் காயை கனியாக்குகிறதோ, அதே காலம் கனியை அழுகவும் செய்கிறது.