கழுதையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
 அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.
- வினோபாஜி
 எந்த உயிரையும் நான் கொல்ல மாட்டேன்; பிறரைக் கொண்டு எந்த உயிரையும் கொல்விக்க மாட்டேன்; எந்த உயிரும் கொல்லப்படுவதற்கு உடன்படவும் மாட்டேன்.
- மகாவீரர்
 எல்லோரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்.
- அசோக சக்கரவர்த்தி
 ஒருவனுடைய ஆசைகள் வளர வளர, அவனுடைய தேவைகளும் வளர்ந்து கொண்டே போகும்.
- பிளேட்டோ
 உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகத்தைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.
- கதே
 கோபத்துடன் காரியம் செய்பவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர்கள்.
- பிரெஞ்சுப் பழமொழி
 நீதிக்கும் நேர்மைக்கும் ஒத்திருக்கும் எந்தக் கொள்கையும் சமயத்திற்கு விரோதமாக இருக்க முடியாது.
- வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டன்
 நாக்கு கொடிய மிருகம்; ஒரு முறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்.
- அரிஸ்டாடில்
 உள்ளத்தின் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
- ஷேக்ஸ்பியர்
 மனம் பிறழாமல் இறை நெறியில் ஆழ்ந்துவிடுபவனுக்கு, பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள், மித்திரர்கள் பக்கமுண்டு, பவிசுண்டு, தவிசுண்டு, யமபடர் அணுகாத கதி உண்டு, ஞானமாகிய கதிருண்டு, காய சித்திகள் உண்டு.
- தாயுமானவர்
 மனிதனுக்குப் பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடைக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடைய வொட்டாமல் தடுக்கின்றன.
- திருநாவுக்கரசர்
 விஞ்ஞானத்தின் புனிதமான கடமை உண்மையை நாடுவதாகவே இருக்க வேண்டும்.
- சரோஜினி தேவி
 சுமையைத் தாங்கி அலுக்காமல் உழைக்க வேண்டும். வெயிலையும் குளிரையும் பாராட்டக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவை மூன்றையும் கழுதையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- சாணக்கியன்
 ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போனால் அரை நிமிடம் கூட மக்கள் இந்த உலகில் வாழ்க்கையை நடத்த முடியாது. இந்த மனித சமூகம் அத்தகையோர் ஒற்றுமை இல்லாவிட்டால் கட்டாயம் அழிந்தே தீரும்.
-சி. ஆர். தாஸ்
 நல்ல அதிர்ஷ்டத்தை நாம் அடிமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அடிமைப்படுத்திவிடும்.
- சைரஸ்
 அவசியமானால் நீ உன் உடைகளைப் பற்றி கவனிக்காமலிருக்கலாம். ஆனால் ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
- மார்க்ட்வெயின்
 கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால், செய்ய வேண்டிய காரியத்தை மனிதன் செய்ய மாட்டான்; அப்போது சாஸ்திரம் என்ற விளக்குத்தான் வெளிச்சம் காட்டும்.
- மகாகவி பாரதியார்
 பயம் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருப்பதில்லை.
- செனகோ
 படித்த முட்டாள், படிக்காத முட்டாளை விட மோசமானவன்.
- நிக்கல்ஸன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|