* புகழ் என்றால் மகிழ்வதும், இகழ் என்றால் வருத்தப்படுவதும் வாழ்க்கைக்குத் துணை செய்யாது. அதுவும் தொண்டு வாழ்க்கைக்கு முற்றாகக் கூடாது.
* தாழ்வான கூரை உள்ள வீட்டில் எளிதில் தீப்பிடிக்கும். அதுபோல தாழ்வான நோக்கங்கள் உடையவர்கள் எளிதில் பகை கொள்வர்.
* குற்றங்களை மறைக்க விரும்புபவரின் சிறந்த கருவியே கோபமும், உரக்கப் பேசுதலுமாகும்.
* காரணங்களும் பயன்களும் இல்லாமலே கூட, தவறுகள் செய்பவர்கள் உள்ளனர்.
* முறையாகச் செய்யப் பெறாத மருத்துவம் நோயை விடக் கொடியது.
* காலந் தவறுதலை ஒழுக்கக்கேடு என்று உணராதவரை சமூகம் வளராது!
* காலத் தவறிச் செய்யப் பெறும் பணிகள் பொருள் இழப்பைத் தரும்.
* சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கானா விட்டால் புதிய சிக்கல்கள் தோன்றும்.
* திட்டமிட்டுச் செய்யாத பணிகளில் பணமும் பாழாகிறது. பயனும் இல்லாமல் போகிறது.
* சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்!
* தமிழ் இருக்கும் இடத்திலேயே தமிழர் இருப்பது என்று உறுதி எடுப்பாரானால் தமிழ் வளர்ந்து ஓங்கும்.
* சமூக வாழ்க்கையின் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுக்குட்பட்டதே!
* பெரும்பாலும் பழக்கங்கள் என்பன முன்னேற்றத்திற்குத் தடையாய் அமைவனவேயாம்.
* ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அந்தச் சமூகத்திற்கு முன்னேற வேண்டும் என்ற ஆசை வேண்டும்.
* சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது.
* ஆசைகள் ஒவ்வொன்றும் சுதந்தரத்திற்குப் போடப்படும் விலங்குகள்.
* திருவள்ளுவரையும் வள்ளலாரையும் தமிழகம் பின்பற்றாததால்தான் நம்நிலை தாழ்ந்தது.
* இயற்கையில் உள்ள அழகுக்கு உயிர் உண்டு. செயற்கைக்கு அது இல்லை.
* ஒற்றுமையை விரும்புகிறவர்கள் காரண காரியங்களை ஆராய மாட்டார்கள்!
* மோசமான மனிதர்கள் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள்.
* மதங்கள் தோன்றிய பிறகுதான் சமூகம் சீரழிந்தது.
* அக்கறையுடைய வாழ்க்கையே ஆளுமையைத் தரும்.