சொர்க்கம் எங்கு இருக்கிறது?

சத்தியத்திற்கும் நேர்மைக்கும் உயர்வான மதமே இல்லை.
- மகாத்மா காந்தி

உடம்பை வலிமை செய்வதற்கு மனவலிமை வேண்டும்.
– பாரதியார்

துக்கப்படுவது எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது.
- ராஜாஜி

உணவு உடையும் உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
- இயேசுநாதர்

தன்னைச் சரிபடுத்திக் கொள்பவனே, உலகைச் சரிபடுத்த தகுதியானவன்.
- விவேகானந்தர்

எந்தக் காரியமும் அதற்குரிய காலத்திலேயே செய்யப்பட வேண்டும்.
- ஒளவையார்

சொர்க்கம் தாயின் இரு பாதங்களுக்கு அடியில் இருக்கிறது.
- நபிகள் நாயகம்

பிறருக்காக வாழும் பொதுநலப் பண்பு மனிதனுக்கு ஒரு நலமாகும்.
- அரவிந்தர்

மூடனைப் பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.
- புத்தர்

மனிதர்கள் தம் குறைகளுக்குக் கூசுவது போல, குற்றங்களுக்குக் கூசுவதில்லை.
- ஆபிரகாம் லிங்கன்

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- சாணக்கியர்

இருப்பது இறைவன் மட்டுமே அதற்கு அந்நியமாய் எதுவும் இல்லை.
- ஸ்ரீரமணர்

மௌனமாகத் தியானம் செய்தால் மனம் கலங்காத நிலைபெறும்.
- மகாவீரர்

பயத்தை ஏற்படுத்துவதும், பயத்தைப் போக்குபவனும் இறைவனே.
- விஷ்ணு சகஸ்ரநாமம்

அறிவு பெருகும்போது சந்தேகமும் பெருகுகிறது.
- கதே

பிறருடன் பேசும்போது பிறகு நினைத்து வருந்தும் சொற்களைப் பேசாதீர்கள்.
- நபிகள் நாயகம்

பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.
- பைபிள்

நாம் உயிர்களிடம் அளவு கடந்த கருணை வைத்தாலன்றி நாம் கடவுளின் கருணையை பெற முடியாது.
- கிருபானந்தவாரியார்

கடவுள் அருள் இல்லை என்றால், ஒரு சிறு காரியத்தைச் செய்வதுகூட பெரும் கஷ்டமாகி விடும்.
-சாணக்கியன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.