அதிகம் பேசுகிறவர்கள்...!

சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒரு நாளேனும் பெருமுயற்சியோடு வாழ்ந்திருத்தல் மேலானது.
- புத்தர்

தன்னிடம் கடவுளைக் காணாதவர்களுக்குக் கடவுள் இல்லை.
– டால்ஸ்டாய்

குருடனைக் காட்டிலும் குருடன் யார்? ஆசையுள்ளவன்தான் அவன்.
- ஆதி சங்கரர்

மனச்சான்றே மனிதனுடைய இதயத்திலுள்ள கடவுளின் பிரதிநிதி ஆகும். நல்லவராக வாழ விரும்புகிறவர்கள் நல்வாழ்வு பெறுவர். தூய மனச்சான்று உடையவர்கள் மட்டுமே சுக வாழ்வு பெறுவர்.
- சாக்ரடீஸ்

மதம் உள்ளபோதே மனிதர்கள் நாம் காணுகிறபடி இவ்வளவு கெட்டவர்களாய் இருந்தால், மதம் இல்லாவிட்டால் இன்னும் எவ்வளவு கெட்டவர்களாய் இருப்பார்கள்?
- பிராங்ளின்

மனிதனை எது அடிமையாக்குகிறதோ, அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
- போப்

எவன் மீதாவது பழிச்சொற்களைச் சுமத்திக்கொண்டு திரிபவன், ஊரிலுள்ள அத்தனை பேருக்கும் மறைமுகமான பகையாளியாகி விடுகிறான்.
- ஔவையார்

நேர்மையும் உண்மையும் ஒவ்வொரு நற்பண்புக்கும் அடிப்படையாகும்.
- கன்பூஷியஸ்

ஒருவன் தனக்கு என்ன வேண்டுமென்று விரும்புகிறானோ, அதுவே தன் சகோதரனுக்கும் வேண்டுமென்று விரும்புகிறவன் தான் உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவன்.
- நபிகள் நாயகம்

நண்பர்களும் உறவினர்களும் ஒருவனைச் சுடுகாட்டில் விட்டு வந்துவிடுகிறார்கள்; அவனோடு யாரும் கூடப் போவதில்லை. அவன் செய்த பாவ புண்ணியச் செயல்களே அவனைத் தொடருகின்றன.
- மகாவீரர்

அறிவு எப்போதும் பக்திக்குப் பின்னரே செல்ல வேண்டும். அதை முந்தவும் கூடாது; அழிக்கவும் கூடாது.
- தாமஸ் கெம்பிஸ்

குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய்.
- தாக்கரே

வேலை என்பது உங்கள் திறமை எத்தமையது என்பதைக் காட்டும் ஒரு வாய்ப்பே தவிர வேறல்ல.
- நெப்போலியன்

பிறர் குற்றம் காண்பதும், தன் குற்றம் மறுப்பதுமே மடமையின் லட்சணம்.
- ஸிஸரோ

உயிரினங்கள் அனைத்துமே பயணிகள்தாம். இறுதி அழைப்பு வந்ததும் கண நேரங்கூடத் தாமதிக்க முடியாது.
- குரு நானக்

பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனிதக்குணம். பிறர் துன்பத்தை நீக்குதல் தெய்வக்குணம்.
- ஹோரெஸ்மான்

அதிகம் பேசுகிறவர்கள் சிந்திப்பதில்லை. மௌனம் என்பது உரையாடல் கலையில் சிறந்த ஒன்றாகும்.
- க்ளீரோ
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.