யார் யோகி ஆவான்?

நல்ல மரங்கள்நல்ல கனியைக் கொடுக்கும்; நல்ல மக்கள் நல்லதையே செய்வார்கள்.
– இயேசுநாதர்

சத்தியமும், அன்பும், அருளும் வாழ்வில் மலர்ந்து விட்டால் நாம் கடைத்தேறிவிட்டோம் என்று ஆகும். இல்லையேல் நம் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று கொள்ள வேண்டியதுதான்.
- குருநானக்

தாமரையிலை மீதுள்ள நீரைப் போன்றும், ஊசிமுனை மீதுள்ள கடுகைப் போன்றும், எவன் ஆசைகளுக்குக் கட்டுப்படாதவனோ அவனே யோகி ஆவான்.
- தம்மபதம்

பெண், பொன், பொருள் என்ற ஆசைகளை வளர்ப்பதால் கூடவே துன்பமும் வளரும். அவற்றிலிருந்து விடுபட்டால் இன்பம் வரும்.
- பாகவதம்

மனிதன் கடைத்தேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழி முக்கியமானது. அது தன்னைத் தானே சோதனை செய்து கொள்வதாகும்.
- கிருபானந்தவாரியார்

தனித்து நம்மால் செயல்பட முடியாததற்குக் காரணம் வலிமையற்ற மனம்தான்.
- ஸ்ரீ ரமண மகரிஷி

கருணையில்தான் ஒரு மதத்தின் ஆணிவேரே அடங்கியிருக்கிறது.
- ஒளவையார்

மூடனைப் பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்.
- புத்தர்

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- சாணக்கியர்

மனிதர்கள் தம் குறைகளுக்குக் கூசுவது போல, குற்றங்களுக்குக் கூசுவதில்லை.
- ஆபிரகாம் லிங்கன்

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதை விட உயர்ந்த பெருமையும் புகழும் வேறில்லை.
- ஸ்ரீ அரவிந்தர்

எப்போது மனிதன் தன்னுள் இருக்கும் அளவில்லாத சக்தியை உணர்ந்து இயற்கையாகச் சுய அறிவையும் புதிய பெரிய எண்ணங்களையும் அடைகிறானோ, அப்போதே அவன் உண்மையான கல்விமானாகிறான்.
- ராமதீர்த்தர்

கறந்த பாலில் மறைந்து உறையும் நெய் போல, பரமாத்மா ஒவ்வொரு ஜீவனிடத்தும் வாழ்கிறான்.
- உபநிஷதம்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.