1. ஒரு குகை, 32 வீரர்கள், ஒரு நாகம்,
அந்தக் குகை எது?
2. விரல் இல்லாமலே ஒரு கை.
அது என்ன?
3. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான்.
அவன் யார்?
4. மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல.
அது என்ன?
5. முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை
அது என்ன?
6. அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன்.
அவர்கள் யார்?
7. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை.
அது என்ன?
8. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான்.
அவன் யார்?
9. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால், கண்ணீரும் கம்பலையும்தான்?
அவள் யார்?
10. தனித்து உண்ண முடியாது என்றாலும், இது சேர்த்தால்தான் உணவுக்குச் சுவை.
அது என்ன?
விடைகள்:
1. வாய்
2. உலக்கை
3. நாற்காலி
4. விழுது
5. நட்சத்திரங்கள்
6. சூரியன், சந்திரன்
7. வானொலிப் பெட்டி
8. முகம் பார்க்கும் கண்ணாடி
9. வெங்காயம்
10. உப்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.