1. ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமி.
அது என்ன?
2. காட்டில் தொங்கும் பொட்டலத்துக்கு காவலர்கள் பலர்.
அது என்ன?
3. நடக்க முடியாதவன். நகராமல் இருக்க மாட்டான்.
அவன் யார்?
4. மழை வராத நேரத்திலும் மங்கம்மா குடை பிடிக்கிறாள்.
அவள் யார்?
5. பார்வைக்கு அழகானவள். பாம்புக்கு எதிரானவள்.
அவள் யார்?
6. ஆண்டுக்கு ஒரு முறை வந்தாலும், அழகாயிருப்பாள்.
அவள் யார்?
7. ஆனை விரும்பும், சேனை விரும்பும். அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும்.
அது யார்?
8. படபடக்கும், நீர் சுரக்கும், அக்கம் பக்கம் சுழலும், அடிக்கடி மூடித் திறக்கும்.
அது என்ன?
9. வலை பின்னியவன், கடலுக்கும் போகாமலே, உணவைப் பிடிக்கிறான்.
அவன் யார்?
10. தொப்பென்று விழுந்தவன், தொப்பி கழன்றவன்.
அவன் யார்?
விடைகள்:
1. வெங்காயம்
2. தேன் கூடு
3. கடிகாரம்
4. காளான்
5. மயில்
6. நாட்காட்டி
7. கரும்பு
8. கண்
9. சிலந்தி
10. பனம்பழம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.