1. அக்காள் தங்கை உறவுண்டு. அண்டை அண்டை வீடுண்டு, கிட்டக்கிட்ட வந்தாலும், தொட்டுக் கொள்ள முடியாது -
அது என்ன?
2. அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து -
அது என்ன?
3. அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி, அழகான சங்கிலியை மேல்பூட்டி, வெள்ளித் திருகாணியைச் சுழட்டிவிட்டால், வீசம் நாழிகையில் போய்விடும் -
அது என்ன?
4. அடிப்பார் பிடிக்கமாட்டார்-
அது என்ன?
5. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம் -
அது என்ன?
6. அஞ்சா அஞ்சரப் பெட்டி, அய்யாத கைத்துப் பெட்டி, மூடித்திறக்க முப்பது நாள் ஆகும் -
அது என்ன?
7. அஞ்சுவிரல் அமர்ந்தாட, பத்துவிரல் பந்தாட, சூரியனுடன் வாதாட, எமனுடன் போராட -
அது என்ன?
8. அடிமேல் அடிவாங்கி அழுதாலும், அனைவரையும் சொக்க வைக்கும் -
அது என்ன?
9. அத்துவானக் காட்டில் ஒளவையார் பொரி பொரிக்கிறாள் -
அது என்ன?
10. அண்ணன் தம்பி இரண்டு பேர்; அவர்களைச் சுற்றிப் பன்னிரண்டு பேர்-
அது என்ன?
விடைகள்:
1. கண்
2. கோலம்
3. தொடருந்து
4. தேன்
5. வளையல்
6. நோன்பு பண்டிகை
7. வறட்டி
8. மிருதங்கம்
9. பருத்தி
10. கடிகாரம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.