1. உடம்பில்லாத ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்.
அவன் யார்?
2. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான்.
அவன் யார்?
3. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் கூட்டம் சேர்த்து வந்திடுவான்.
அவன் யார்?
4. உணவை எடுப்பான். ஆனால், உண்ணமாட்டான்.
அவன் யார்?
5. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான்.
அவன் யார்?
6. பற்கள் இருக்கும் கடிக்க மாட்டான்.
அவன் யார்?
7. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன், நாள்தோறும் கரைகிறான்.
அவன் யார்?
8. முறையின்றித் தொட்டால், ஒட்டிக் கொண்டு உயிரையே எடுத்து விடுவான்.
அவன் யார்?
9. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான்.
அவன் யார்?
10. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்.
அவன் யார்?
விடைகள்:
1. வெங்காயம்
2. பூரி
3. காகம்
4. அகப்பை
5. தேன்
6. சீப்பு
7. நாட்காட்டி
8. மின்சாரம்
9. பந்து
10. அருவி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.