1. ஆயிரம் தடவை ஆடினாலும் அயராத பெண்கள் இவர்கள்.
யார் இவர்கள்? (அமெரிக்கா)
2. உன்னை வந்து அமுக்கும். ஆனால், உனக்குத் தெரியாது இருக்கும்.
அது என்ன? (மெக்சிகோ)
3. ஆடச் சொல்லிச் சட்டை போடுவார்; ஆடும் முன்பே கழற்றி விடுவார்.
யார் இவர்? (கியூபா)
4. ஒரே குளத்தில் ஒரே மீன். வெளியே எட்டிப் பார்த்தாலும் வேறு குளம் போகாது.
அது எந்த மீன்? (ஹெய்டி)
5. இரவு வந்தால் தோட்டத்தில் எத்தனையோ பூ பூக்கும். பொழுது விடிந்ததுமே பூவெல்லாம் மறைந்துவிடும்.
எந்தப் பூக்கள் இவை? (மேற்கு இந்தியா)
6. பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப் பதறி அழுவான்.
யார் அவன்? (சிலி)
7. பாட்டுப் பாடி வருவார்; ‘பட்’டென்று அடித்தால் சாவார்.
யார் அவர்? (பராகுவே)
8. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.
யார் அவன்? (இங்கிலாந்து)
9. வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு விளக்கு எரியுது தலைக்கு மேலே.
யார் அந்தச் சீமாட்டி? (வேல்ஸ்)
10. வெள்ளை வீட்டுக்கு இரண்டு கூரை. கதவும் இல்லை; காவலும் இல்லை.
அது எந்த வீடு? (அயர்லாந்து)
விடைகள்:
1. கண் இமைகள்
2. தூக்கம்
3. பம்பரம்
4. நாக்கு
5. நட்சத்திரங்கள்
6. ஆர்மோனியம்
7. கொசு
8. மீன்
9. மெழுகுவர்த்தி
10. முட்டை
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.