1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம்.
அது என்ன?
2. முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல்.
அது என்ன?
3. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது.
அது என்ன?
4. பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது.
அது என்ன?
5. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம்.
அது என்ன?
6. வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை.
அது என்ன?
7. எரித்தால் சிவப்பு அணைந்தால் கறுப்பு.
அது என்ன?
8. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான்.
அது என்ன?
9. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு.
அது என்ன?
10. ஒற்றைக் காது உள்ளவனுக்கு ஒருபோதும் கேட்காது.
அது என்ன?
விடைகள்:
1. கனவு
2. நாக்கு
3. புகைப்படம்
4. தேங்காய்
5. முட்டை
6. அப்பளம்
7. கரித்துண்டு
8. கப்பல்
9. சோப்பு நீர்க் குமிழ்
10. ஊசி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.