1. நீலக்கடலிலே வெண் பஞ்சு மிதக்குது.
அது என்ன?
2. தன் மேனி முழுதும் கண்ணுடையாள், தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள்.
அவள் யார்?
3. வண்ணப்பட்டுச் சேலைக்காரி, நீலப்பட்டு ரவிக்கைக்காரி.
அவள் யார்?
4. விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது.
அது எது?
5. பொட்டுப் போல் இலை இருக்கும், குச்சி போல் காய் காய்க்கும்.
அது என்ன?
6. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம். எவராலும் பார்க்க இயலாத கடிகாரம்.
அது என்ன?
7. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது.
அது என்ன?
8. வெட்டிக் கொள்வான். ஆனாலும், ஒட்டிக்கொள்வான்.
அவன் யார்?
9. பிறக்கும்போது வால் உண்டு, இறக்கும்போது வால் இல்லை.
அது என்ன?
10. அதட்டுவான், அலறுவான். ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான்.
அவன் யார்?
விடைகள்:
1. மேகம்
2. அன்னாசிப்பழம்
3. மயில்
4. தலையாட்டி பொம்மை
5. முருங்கை
6. இதயம்
7. கண்கள்
8. கத்தரிக்கோல்
9. தவளை
10. நாக்கு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.