1. வெயிலில் மலரும்; காற்றில் மறையும்.
அது என்ன?
2. பூவில் பிறக்கும்நாவில் சுவைக்கும்.
அது என்ன?
3. அரைச் சாண் குள்ளனுக்கு, கால் சான் தொப்பி.
அது என்ன?
4. குளித்தால் கருப்பு, குளிக்காவிட்டால் சிவப்பு.
அது என்ன?
5. இரவிலே பிறந்த இளவரசனுக்குத் தலையிலேயே குடை.
அது என்ன?
6. வெட்ட வெட்டத் தழைக்கும் பட்டணத்து வேம்பு.
அது என்ன?
7. நீலக் கடலிலே வெண் பஞ்சு மிதக்குது.
அது என்ன?
8. தலையில் கிரீடம் வைத்த தங்கப் பழம்.
அது என்ன?
9. அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது.
அது என்ன?
10. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது.
அது என்ன?
விடைகள்:
1. வியர்வை
2. தேன்
3. பேனா
4. நெருப்பு
5. காளான்
6. தலைமுடி
7. மேகம்
8. அண்ணாசிப்பழம்
9. இடியாப்பம்
10. பட்டாசு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.