1. விடிந்தவுடனே வேலை செய்வாள். வேலை முடிந்தவுடன் மூலையில் நிற்பாள்.
விடை சொல்லுங்க...!
2. மேல் வீட்டில் மத்தளமாம்; கீழ் விட்டில் நாட்டியமாம்.
விடை சொல்லுங்க...!
3. வயிறு புடைக்கத் தின்றால்தான், நிமிர்ந்து நிற்பான் குண்டப்பன்.
விடை சொல்லுங்க...!
4. வேகமாய்ப் போகும் அம்மணிக்கு, விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை.
விடை சொல்லுங்க...!
5. தகப்பனுக்குப் பத்துப்பிள்ளைகள். அவர்களுக்குத் தலைக்குப் பின்னே தொப்பியுண்டு.
விடை சொல்லுங்க...!
6. இவர் பேரைப் பலரும் கேட்பர்; இவரைப் போட்டுப் பலரும் மிதிப்பர்; ஆனால், இவர் எவர் பெயரையும் கேட்பதில்லை, எவரையும் போட்டு மிதிப்பதுமில்லை.
விடை சொல்லுங்க...!
7. சின்னக் குகைக்குள் சிவப்புக் கொடி அசையுது.
விடை சொல்லுங்க...!
8. வாலைப் பிடித்து இழுக்க இழுக்க வளர்ந்து கொண்டே போகும்.
விடை சொல்லுங்க...!
9. ஒரு வீட்டுக்கு ஒரே ஆள்; உருவில் மிகவும் சிறிய ஆள்.
விடை சொல்லுங்க...!
10. வெள்ளைக் குடையை மேலே பிடிப்பார்; மெதுவாய்த் தட்டினால் ஒடிந்து விடுவார்.
விடை சொல்லுங்க...!
விடைகள்:
1. துடைப்பம்
2. இடி, மழை
3. கோணிப்பை
4. பறவை இறகு
5. கைவிரல்கள், நகங்கள்
6. தெரு
7. நாக்கு
8. நூல்கண்டு
9. நத்தை
10. காளான்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.