1. சூடுபட்டுச் சிவந்தவன், வீடு கட்ட உதவுவான்.
அவன் யார்?
2. கள்ளனுக்குக் காவல், காற்றுக்குத் தோழன்.
அவன் யார்?
3. உள்ளே இருந்தால் ஒடித்திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.
அவன் யார்?
4. முன்னும் பின்னும் போவான் - ஆனால், ஒற்றைக் காலில் நிற்பான்.
அவன் யார்?
5. ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது.
அது என்ன?
6. சிறுசிறு கதவுகள்; செய்யாக்கதவுகள்; திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள்.
அவை எவை?
7. அரைச் சாண் குள்ளனுக்குக் கால் சாண் தொப்பி.
அது எது?
8. நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு நறுக்கென்று கடிக்கிற வேலை.
அது எது?
9. தொட்டால் மணக்கும்; குடித்தால் புளிக்கும்.
அது எது?
10. பறிக்கப் பறிக்க பெரிதாகும்.
அது என்ன?
விடைகள்:
1. செங்கல்
2. சன்னல்
3. மீன்
4. கதவு
5. ஊசி
6. கண் இமைகள்
7. பேனா
8. அரிவாள்மனை
9. எலுமிச்சம்பழம்
10. குழி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.