1. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ள நீரைக் கண்டு பதைபதைக்கிறான்.
அது என்ன?
2. ஊர் சுற்ற வருவான்; ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான்.
அவன் யார்?
3. கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும்.
அது என்ன?
4. நான் அவனைச் சுமக்கிறேன். அவன் என்னைச் சுமக்கிறான்.
அவன் யார்?
5. பற்கள் இல்லையென்றாலும், சில நேரங்களில் கடிக்கும்.
அது என்ன?
6. ஓடியாடி வேலை செய்தபின், மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள்.
அவள் யார்?
7. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலில் நிற்பான்.
அவன் யார்?
8. முற்றத்தில் நடப்பாள்; மூலையில் கிடப்பாள்.
அவள் யார்?
9. தோகை மயிலால் சொகுசுக்காரி வேலைக்காரன் கையால் தொல்லைப்படுவாள்.
அவள் யார்?
10. விடிந்தவுடனே வேலை செய்வாள்; வேலை இல்லையேல் மூலையில் முடங்கிப்போவாள்.
அவள் யார்?
விடைகள்:
1 முதல் 5 வரை: செருப்பு
6 முதல் 10 வரை: துடைப்பம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.