1. வெளியே நார்ப்பூட்டு; உள்ளே வெள்ளிப்பூட்டு.
அது என்ன?
2. பச்சை மலை; பஞ்சு மலை; உருண்டை மலை; வெள்ளை மலை; வெள்ளை மலைக்குள் தெப்பக்குளம்.
அது என்ன?
3. ஊசி நுழையாத கிணற்றில் ஒருபடி தண்ணீர்.
அது என்ன ?
4. தாடிக்காரன்; மீசைக்காரன்; கோவிலுக்குப் போனால் வெள்ளைக்காரன்.
அது என்ன?
5. காய் உண்டு; கனி இல்லை.
அது என்ன?
6. வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணிர்.
அது என்ன?
7. சூரியன் காணாத கங்கை; சுண்ணம் தோற்கும் வெள்ளை; மண்ணிற் பண்ணாத பாண்டம்.
அது என்ன?
8. அடித்தால் அழுவான்; பிட்டால் சிரிப்பான்.
அவன் யார்?
9. உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல. உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல. நீர் ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல. நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல.
அது என்ன?
10. உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்ல. உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்ல. உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்ல.
அது என்ன?
விடைகள்:
1 முதல் 10 வரை: தேங்காய்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.