1. வாசலில் ஒரு வட்டு, உள்ளே ஒரு பொட்டு
- அது என்ன?
2. கிண்ணத்தில் இடமில்லாத கிண்ணம்
- அது என்ன?
3. வெள்ளை மாளிகைக்குள் மஞ்சள் புதையல்
- அது என்ன?
4. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை; வழியும் இல்லை
- அது என்ன?
5. வெளியே வெள்ளிக் கட்டி; உள்ளே தங்கக் கட்டி
- அது என்ன?
6. ஒரே புட்டியில் இரண்டு தைலம்
- அது என்ன?
7. வெள்ளை ஆடை உடுத்திய மகாராணி
- அது என்ன?
8. வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்குப் பூட்டுமில்லை, திறப்புமில்லை
- அது என்ன?
9. பாத்திரம் ஒன்று, பழரசம் இரண்டு
- அது என்ன?
10. பளிங்கியை உடைத்தால் வெள்ளி; வெள்ளியை உடைத்தால் தங்கம்
- அது என்ன?
விடைகள்:
1 முதல் 10 வரை: முட்டை
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.