1. கால் உண்டு; நடக்க மாட்டான். முதுகு உண்டு; வளைக்க மாட்டான். கை உண்டு; மடக்க மாட்டான்.
அவன் யார்?
2. அரைச் சாண் குள்ளன், கால் சாண் தொப்பி வைத்திருப்பான்.
அவன் யார்?
3. உருவமில்லாதவன் சொன்னதைத் திருப்பிச் சொல்வான்.
அவன் யார்?
4. இரவிலே பிறந்த இளவரசனான இவன், தலையிலே குடை வைத்திருப்பான்.
அவன் யார்?
5. அடித்தால் அழுவான்; பிட்டால் சிரிப்பான்.
அவன் யார்?
6. வெய்யிலில் காய்வான்; மழையில் நனைவான். அண்டி வந்தவர்க்கு அடைக்கலம் தருவான்.
அவன் யார்?
7. கடல் நீரில் வளர்வான், மழை நீரில் மடிவான்.
அவன் யார்?
8. மாட மாளிகையில் வசிப்பான்; மன்னவனும் அல்ல. கூட கோபுரத்தில் வசிப்பான்; கொற்றவனும் அல்ல.
அவன் யார்?
9. பால் இல்லாமல் பருப்பான்; நோய் இல்லாமல் இளைப்பான்.
அவன் யார்?
10. கறுப்புச் சட்டை போட்டவன்; கபடம் அதிகம் உள்ளவன்; கூவி அழைத்தால் வந்திடுவான்; தன் கூட்டம் முழுதும் சேர்த்திடுவான்.
அவன் யார்?
விடைகள்:
1. நாற்காலி
2. பேனா
3. எதிரொலி
4. காளான்
5. தேங்காய்
6. குடை
7. உப்பு
8. புறா
9. நிலா
10. காகம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.