1. ஒல்லியாய் இருப்பவராம்; ஒற்றைக்கண் உடையவராம்; உடம்பிலே பட்டாலோ 'உஸ்' என்று கத்திடுவாராம்! -
அது என்ன? (அமெரிக்கா)
2. வேகமாய்ப் போகிற அம்மணிக்கு, விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை -
அது என்ன? (மேற்கு இந்தியத் தீவுகள்)
3. என் பெயரைக் கேட்பவர் அநேகர். என்னைப் போட்டு மிதிப்பவரும் அநேகர். நான் யார் பெயரையும் கேட்பதுமில்லை; எவரையும் போட்டு மிதிப்பதும் இல்லை. -
நான் யார்? (அர்ஜென்டைனா)
4. பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப் பதறி நான் அழுவேன்.
நான் யார்? (சிலி)
5. முண்டாசு கட்டின சின்னப் பையன் வீட்டுச் சுவரில் மோதினான்; வெளிச்சம் போட்டுச் செத்தான்.
யார் அவன்? (சிலி)
6. பாட்டுப் பாடி வருவார்; ‘பட்’டென்று அடித்தால் சாவார்.
யார் அவர்? (பராகுவே)
7. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.
யார் அவன்? (இங்கிலாந்து)
8. வாலைப் பிடித்து இழுக்க இழுக்க வளர்ந்து கொண்டே போகும்.
அது என்ன? (பிரான்சு)
9. வெள்ளைக் குடையை மேலே பிடிப்பார்; மெதுவாய்த் தட்டினுல் ஒடிந்து விழுவார்.
யார் அவர்? (ஹங்கேரி)
10. எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால், எவரும் என்னை ஏறிட்டுப் பார்க்க மாட்டார்.
நான் யார்? (இஸ்ரேல்)
விடைகள்:
1. ஊசி
2. பறவை இறகு
3. தெரு
4. ஆர்மோனியம்
5. தீக்குச்சி
6. கொசு
7. மீன்
8. நூல்கண்டு
9. காளான்
10. சூரியன்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.