1. நனைந்தாலும் நடுங்கமாட்டான்.
அவன் யார்?
2. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான்.
அவன் யார்?
3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம்.
அவன் யார்?
4. ஆளுக்கு துணை வருவான், ஆனால் அவன் பேச மாட்டான்.
அவன் யார்?
5. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான்.
அவன் யார்?
6. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான்.
அவன் யார்?
7. வயிறு முட்ட சாப்பிட்டால்தான் நிமிர்ந்து நிற்பான்.
அவன் யார்?
8. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான்.
அவன் யார்?
9. உதைக்க தெரிந்தவனுக்கு நன்கு உழைக்கவும் தெரியும்.
அவன் யார்?
10. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான்.
அவன் யார்?
விடைகள்:
1. குடை
2. தவளை
3. பம்பரம்
4. நிழல்
5. காற்று
6. நண்டு
7. பலூன்
8. சூரியன்
9. கழுதை
10. அழிரப்பர்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.