1. யாரும் ஏற முடியாத மரம், கிளைகள் இல்லாத மரம்.
அது என்ன?
2. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது.
அது என்ன?
3. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி.
அது என்ன?
4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம்.
அது என்ன?
5. மஞ்சள் சட்டை மாப்பிள்ளை, மணமணக்கிறார் வீட்டிலே...
அது என்ன?
6. நாலு மூல சதுக்கம், அம்பது பேரு அடக்கம்.
அது என்ன?
7. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல, சூடு கொடுக்கும், தீ அல்ல, பளபளக்கும், தங்கம் அல்ல.
அது என்ன?
8. செடி வளர்வது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது.
அது என்ன?
9. மண்ணில் பிறந்து, விண்ணில் மறையும்.
அது என்ன?
10. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது.
அது என்ன?
விடைகள்:
1. வாழை மரம்
2. தண்ணீர்
3. பூண்டு
4. வானம்
5. எலுமிச்சம்பழம்
6. தீப்பெட்டி
7. சூரியன்
8. வேர்க்கடலை
9. புகை
10. நிழல்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.