1. ஒற்றைக் காலில் நிற்பான். ஆனால், முன்னும் பின்னும் போய் வருவான்.
அவன் யார்?
2. ஒல்லியான, ஒரு காது மனிதன், அவன் காது போனால், அவனால் பயனில்லை.
அவன் யார்?
3. முதுகை அமுக்கினுல் மூச்சுவிடுவான்; பல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவான்.
அவன் யார்?
4. சாண் உயரப் பையன், வைத்ததெல்லாம் சுமப்பான்.
அவன் யார்?
5. உருவமில்லாதவன், சொன்னதைத் திருப்பிச் சொல்வான்.
அவன் யார்?
6. நடக்கத் தெரியாதவன், நடப்பவனுக்கு வழி காட்டுவான்.
அவன் யார்?
7. அடித்தால் அழுவான்; பிரித்து விட்டால் சிரிப்பான்.
அவன் யார்?
8. கேட்டால் பேசமாட்டான், இரண்டு போட்டால் பேசுவான்.
அவன் யார்?
9. பால் இல்லாமல் பருப்பான்; நோய் இல்லாமல் இளைப்பான்.
அவன் யார்?
10. தன்னைத் தானே பலி கொடுப்பான்; பிறருக்கு ஒளி கொடுப்பான்.
அவன் யார்?
விடைகள்:
1. கதவு
2. ஊசி
3. ஆர்மோனியம்
4. அடுப்பு
5. எதிரொலி
6. கைகாட்டி
7. தேங்காய்
8. மத்தளம்
9. நிலா
10. மெழுகுவர்த்தி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.