1. நீலக்கடலிலே வெண் பஞ்சு மிதக்குது.
அது என்ன?
2. பூவில் பிறக்கும்; நாவில் இனிக்கும்.
அது என்ன?
3. தண்ணீரில்லாமல் வளரும், தரையில்லாமல் படரும்.
அது என்ன?
4. பட்டனைத் தட்டினால், சட்டென விரியும்.
அது என்ன?
5. உயரப் பறக்கும். ஆனால், ஊரைச் சுற்றியெல்லாம் பறக்காது.
அது என்ன?
6. நித்திரையின் தூது, நினைக்காமலே வருவது.
அது என்ன?
7. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு -
அது என்ன?
8. குடையுடன் சந்தைக்கு வரும் இதைக் குழம்புக்காக விரும்புவார்கள்.
அது என்ன?
9. காற்றில் பறக்கும் கண்ணாடிக் கூண்டு. கையால் காணாமல் போகுது.
அது என்ன?
10. அழகிய வட்டத்தட்டு, சுடும் எண்ணெயில் போட்டால் பொங்கி எழும்.
அது என்ன?
விடைகள்:
1. மேகம்
2. தேன்
3. தலை முடி
4. குடை
5. கொடி
6. கொட்டாவி
7. நிலா
8. கத்தரிக்காய்
9. சோப்பு நீர்க் குமிழ்
10. அப்பளம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.