1. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள்.
அவள் யார்?
2. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள்.
அவள் யார்?
3. . பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்த வாய்.
அவள் யார்?
4. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள்.
அவள் யார் ?
5. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக் கிடப்பாள்.
அவள் யார்?
6. தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள்.
அவள் யார்?
7. அழகான பெண்ணானாலும், அதிசயமான வியாதி இவளுக்கு. பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.
அவள் யார்?
8. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி.
அவள் யார்?
9. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி.
அவள் யார்?
10. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்.
அவள் யார்?
விடைகள்:
1. வெங்காயம்
2. மெழுகுவர்த்தி
3. பச்சைக்கிளி
4. ஆறு
5. துடைப்பம்
6. மீன் வலை
7. நிலா
8. ஒட்டகம்
9. முட்டை
10. அலைபேசி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.