காகங்கள் சில தகவல்கள்
* உலகிலுள்ள பறவைகளில் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள் காகங்கள்தான்.
* கருவிகளைப் பயன்படுத்தக் கூடியதும் கருவிகளை உருவாக்கக்கூடியதுமான ஒரே பறவை காகம்தான்.
* ஒரு காகம் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது.
* ஆபத்து பற்றிய தகவல்களை மற்ற காகங்களுடன் தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்ளும் திறன் கொண்டவை காகங்கள்.
* காகங்கள் தங்கள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க நீதிமன்றம் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. அங்கு அவைகள் இளவயது காகங்கள் உணவை திருடுவது போன்று செய்யும் எந்த குற்றத்தையும் செய்த காகத்தை தண்டிக்கிறது. இது காகங்களிடம் காணப்படும் வித்தியாசமான செயல் என சொல்லப்படுகிறது.
* ஒரு வேலையை வெற்றியாகச் செய்து முடித்த பிறகு மனிதர்கள் உணரும் சாதனை உணர்வைப் போலவே ஒரு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு, காகங்களும் அதிக நம்பிக்கையுடன் நடந்து கொள்கின்றன.
* மனிதர்களைப் போலவே காகங்களும் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.