நல்லவர் நட்புக்குப் பாலும் தண்ணீரும் உதாரணம்.
பால் தண்ணீரைத் தன்னுடன் சேர்த்துக் கலந்து கொள்கிறது.
தன் குணங்கள் எல்லாவற்றையும், அந்தத் தண்ணீருக்குக் கொடுக்கிறது.
தண்ணீருடன் கலந்த அந்தப் பாலைக் காய்ச்சும் போது, நண்பனான தண்ணீருக்கு உண்டாகும் ஆபத்தைக் கண்டு, தான் சுண்டிப் போகின்றது.
தண்ணீர் முழுவதும் சுண்டி வற்றிப் போனதும், தானும் அந்த நெருப்பில் விழுவதற்காகக் கொதித்து வழிய முயற்சி செய்கிறது.
அப்போது பாலின் நண்பனான தண்ணீரைப் பாலில் சேர்த்தவுடன், பால் கொதிப்படங்கி அமைதி பெறுகிறது. இதுதான் நல்லவர்களின் நட்பு.