குழந்தைக்கு 4 வயதாகும்போது: ஆ! என் அப்பா மாதிரி ஒருவர் உண்டா? எவ்வளவு நல்லவர்!
குழந்தை 6 வயதில்: அடடா, என் அப்பாவிற்குத் தெரியாத விஷயமே கிடையாது
10 வயதில்: அப்பா நல்லவர்தான்! ஆனால் முன்கோபக்காரர். எனது நண்பனின் அப்பாவிற்குத் தெரிந்தது கூட இவருக்குத் தெரியவில்லையே
12 வயதில்: நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம் நல்லபடிதான் நடந்து வந்தார்.... ஆனால் இப்போது...!
16 வயதில்: சே! அப்பா பழைய காலத்து ஆளா இருக்கிறாரு... காலத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே
18 வயதில்: இதென்ன! வர வர இந்த அப்பா கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்! விவரமே தெரியாதவர்
20 வயதில்: அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க முடியவில்லை! அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனைக் காலம் வாழ்ந்தாளோ?
25 வயதில்: எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதான்; எப்போதுதான் அப்பா உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறாரோ, கடவுளே...!
30 வயதில் (ஒரு குழந்தை பிறந்ததும்): ஓ! வர வர என் பையனைச் சமாளிக்கவே முடியவில்லையே! நாங்களெல்லாம் சிறுவயதில் அப்பாவிற்கு எப்படிப் பயப்படுவோம்!
40 வயதில் : ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என் அப்பா? இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை எப்படிக் கண்டிப்பு, கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என்பது அதிசயமாகவே உள்ளது.
45 வயதில்: என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர். அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து, ஆளாக்கி, முன்னுக்குக் கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.
50 வயதில் : இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறதே. அப்பா எங்களை (4 குழந்தைகளை) வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்!
55 வயதில் : அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன் யோசனை! எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து வருகிறார்! ஆ, அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில் சந்தேகமில்லை.
60 வயதில் (கண்ணீருடன்) : என் அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர்தான்.
சிறுவர் சிறுமியர்களே, இளைஞர்களே, இளம் பெண்களே! ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்ற ஔவையின் வாக்கை நினைவில் கொண்டு தந்தை தாயிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
(இணையத்தில் படித்தது)