ராமர், சீதையை விட்டுப் பிரிந்த பிறகு இலங்கைக்குச் சென்று பேச அனுமானைத் தூது அனுப்ப ஏற்பாடு செய்த இடம்தான் தூத்துக்குடி.
அதற்குச் சரியான பெயர் 'தூதுவன் குடி.' அது மருவி நாளடைவில் ‘தூத்துக்குடி' என்று ஆயிற்று.
அந்த இடத்தில்தான் ராமர் அனுமானுக்கு 'தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார்.
அப்போது கடலின் அலை ஓசை, அருகில் இருந்த கீற்றுக் கொட்டகையிலிருந்து கீற்றுக்கள் அசையும் ஓசை, அருகில் குயவர்கள் பானை செய்யும் போது ஏற்பட்ட ஒலி ஆகியவைகளால் ராமர் செய்த உபதேசத்திற்கு இடையூறு வந்தது. ஆதலால் சரியாக உபதேசம் செய்ய ராமரால் இயலவில்லை. ஆகவே, அவர் அவை மூன்றையும் ஒலி எழுப்பாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.
அதனால் தான் தூத்துக்குடியில் இன்றும் கடலில் பெரிய அலைகள் எழும்பினாலும் ஓசை இல்லை, கீற்றுக்கள் அசைந்தாலும் ஓசை இல்லை, அங்கு செய்யப்படும் மண்பாண்டங்களைத் தட்டினாலும் ஓசை எழும்பாது. அதனால் அந்த ஊர்ப்பானைகள் 'கடம்' என்ற வாத்தியத்திற்கு லாயக்கில்லை.