நற்குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
காகத்திடம் பகிர்ந்து உண்ணும்
குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
எறும்பிடம் சேமித்தும் வைக்கும்
குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
நாயிடம் நன்றியுடனிருக்கும்
குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
குதிரையிடம் விரைந்து செயல்படும்
குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
சிலந்திப் பூச்சியிடம் விடா முயற்சியெனும்
குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
தேனீயிடம் சுறுசுறுப்பான உழைப்பெனும்
குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்திலும்
நற்குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
நற்குணத்துடன இருப்பதே நமக்குயர்வெனும்
நல்வாழ்வைக் கற்றுக் கொள்வோம்!
- சுதா அழகர்சாமி, பெரியகுளம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.