இளநீர்
தென்னை மரத்து இளநீரூ - நல்ல
தேன்போல இனிக்கும் சுவைநீரு
என்றும் எங்கும் கிடைத்திடுமே - தினம்
ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!
பானத்தில் இளநீர் அரியவகை - எந்த
காலமும் நமக்கு நல்ல துணை
விலையோ ஒன்றும் அதிகமில்லை - இங்கு
இதுபோல் பானம் வேறு இல்லை.
இயற்கை தந்தது இளநீரு - நல்ல
இன்சுவை தந்திடும் இளநீரு
உடலின் வெப்பம் தணித்திடுமே - நம்
உள்ளம் தனிலே நிறைந்திடுமே!
கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே - நம்
அனைவரின் தாகம் தீர்த்திடுமே!
கோடைகாலத்துக்கு உடம்புக்குநல்லது
உடலுக்கு புத்துணர்ச்சியும் தருமே!
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.