Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 12
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கருத்துப்படங்கள் - ஒரு பார்வை

ச. செந்தில்நாதன்
உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.


முன்னுரை

வளர்ந்து வரும் தகவல் தொடர்பியல் உலகில் இதழ்களின் பங்கு மிக முக்கியமானது. அத்தகைய இதழ்கள் ‘ஆலமரம் விழுது விட்டுப் பரந்து வளர்ந்து இருப்பது போல’ இன்று வளர்ச்சி அடைந்துள்ளன. இவை நாளிதழ், வாரமிருமுறை வருமிதழ், வாரஇதழ், மாதமிருமுறை வருமிதழ், மாதஇதழ், காலாண்டிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் என்று அவை வெளிவரும் பல்வேறுபட்ட கால அளவுப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகைகள் மக்களின் பிரச்சினைகளுக்கேற்ப செல்வாக்குப் பெறுவதற்குப் படங்களும் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

இதழ்களின் செல்வாக்கு

மக்களில் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் சிந்தனைகளிலும் கலந்து பிரிக்க முடியாத வகையில் இன்று இதழ்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதற்கு முழுமுதற்காரணமாக இரண்டை மையப்படுத்திக் கூறலாம். அவை இதழ்களில் இடம் பெறும் நடைமுறைச் சம்பவங்களை உடனுக்குடன் செய்திகளாக்கித் தருவதும் அவை தொடர்பான படங்களை வெளியிடுவதுமாகும். இதழ்களின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே வந்தாலும் அவற்றின் தரத்தை நிர்ணயித்து, குறிப்பிட்ட அளவுகோல் கொண்டு தரமான இதழ் என்று சில இதழ்களை வரையறை செய்யலாம். அவ்வாறு வரையறை செய்வதற்குச் செய்திகள், படங்கள் என்ற இரண்டு முக்கிய உள்ளடக்கக் கூறுகளாக மையப்படுத்தப்படுகின்றன. செய்திகளின் செல்வாக்கு மலிந்திருந்த காலகட்டம் மாறி இன்று படங்களின் செல்வாக்கு விஞ்சி வருகின்றன.

படங்களும் கருத்துப்படங்களும்

படங்கள் இதழ்களில் புகைப்படங்கள், கருத்துப்படங்கள், தொடர்படங்கள், கேலிப்படங்கள் என வெளிவருவதைக் காணலாம். நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தும் படங்களை (புகைப்படங்களை) விட ஒரு கருத்துப்பட ஓவியன் (கார்ட்டூனிஸ்ட்) வரையும் கருத்துப்படமே (கார்ட்டூன்) இன்று அதிக செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது. “அமெரிக்காவில் கட்சி விவகாரங்களில் பெரிய ஊழல் சக்தியாக டம்மானிஹால் அமைப்பைப் கவிழ்த்து விடும் அளவிற்குப் பெரிய அளவில் செல்வாக்குப் பெற்று தாமஸ் நாம்ஸின் கருத்துப்படங்கள் விளங்கின” (1) எனவே அக்காலத்திலேயே கருத்துப்படங்களின் செல்வாக்கு உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தக் கருத்துப் படங்களைப் பற்றிப் பலரும் பலவாறு விளக்கங்களை அளித்துள்ளனர்.

கருத்துப்படம் - விளக்கம்

“ ‘Cartoon’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குக் கேலிசித்திரம் என்று பொருள்” (2) என்கிறார் ரவிராஜ். இதற்கு இன்னொரு சொல்லாகக் ‘கருத்துப்படம்’ என்ற ஒன்றை ‘கார்ட்டூனிஸ்ட்டுகள்’ உருவாக்கியுள்ளனர். கேலிச்சித்திரம், கருத்துப்படம் எனும் இரண்டும் வேறுபட்ட வரைபடங்களே. இவை இருவேறுபட்ட வடிவங்களைக் கொண்டுள்ளதைக் கண்டு, பின்னாளில் கேலிச்சித்திரம் (Caricature), கருத்துப்படம் என்ற முறையான பாகுபாட்டை உணர்த்திக் காட்டலாம் என்றறியப்பட்டது. இதுவும் முடிந்த முடிவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்படாமலும் இருந்தன. பின்னாளில் கேலிச்சித்திரம், கருத்துப்படம் என்ற இரு வகைக்கும் ஒரே சொல்லாகக் ‘கார்ட்டூன்’ என்ற ஆங்கிலச் சொல்லாக்கத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.


கேலிச்சித்திரம்

“இயல்பான மனிதனின் தோற்றத்தை மிகைப்படுத்திக் கேலியும் கிண்டலுமாக வரைபடத்தின் மூலம் வெளிக்காட்டுவது” கேலிச்சித்திரமாகும். (3)

“கேலிச்சித்திரங்கள் மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றன.

1. ஒரு நபரையோ அல்லது செயலையோ நையாண்டி செய்வது

2. ஒரு நபரையோ அல்லது செயலையோ புகழ்வது

3. மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவது” (4)

இதில் பெரும்பாலும் அவர்களை அடையாளப்படுத்துகின்ற மனித உறுப்புகளை மிகைப்படுத்திக் கிண்டல் செய்து சித்திரம் வரைவர். இதனால் வாசகர்கள் மத்தியில் இந்த வகைக் கேலிச்சித்திரம் எள்ளல் நடையைக் கண்முன்னால் காட்டும் படமாக, சுவாரசியமாக இடம் பெற்று வருகிறது.

கருத்துப்படம் - தோற்றமும் விளக்கமும்

கருத்துப் படத்திற்கு விளக்கம் கூறும் பலர் ‘கார்ட்டூன்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய விளக்கமாகவே கூறுகின்றனர். அவ்வாறு கூறியவர்கள் கருத்துப்படத்தின் விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகின்றனர்.

“கருத்துப்படம் என்பது வரைபடம் அல்லது தொடர்வரைபடம் நகைச்சுவை அல்லது ஒரு கருத்தை வலியுறுத்தி நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் வெளியிடப்படும். பொதுவாக, கருத்துப்படம் என்பது கடின அட்டையில் படம் வரைந்து அதை மாதிரியாகப் பயன்படுத்தித் திரைச்சீலையில் எண்ணெய் வண்ணத்தில் வரைப்படும் சுவர்க்கோல ஓவியமாகும். இந்த வகையான படங்கள் ஒத்த அளவுடையனவாக அலங்கரிக்கப்பட்ட சுவர்ப்பகுதிக்கு மாற்றப்படுகின்றன” (5) இதைப் போன்றே “கருத்துப்படம் என்பது ஒரு வகையான வரைபடம் ஒரு கதையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதாகும்” (6) என்று பொதுவான சில கருத்துக்களை ஒட்டி விளக்கங்கள் பலராலும் தரப்பட்டுள்ளன. பழமையான கருத்துக்களைக் கொண்டு (Early Cartoons) கருத்துப்படம் என்பதற்கு விளக்கம் கூறியுள்ளனர்.

கருத்துப்படங்களின் விளக்கத்தைப் பலரும பல தொடர்புக் கூறுகளைக் குறிப்பிட்டு விளக்கம் கூறுகின்றனர். அந்த வகையில், “கருத்துப்படம், வண்ணப்படம் எழுதுதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைபடம் என்றும் தொடர்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி என்றும் குறிக்கப்படுகிறது. ஒரு வகையான திரைச்சீலை மீது இயங்கா நிழற்படங்களைப் பல வண்ணப்பட்டையின் உதவியுடன் வரையப்பட்ட படமாகும்” (7) என்று கருத்துப்படத்திற்கு வண்ணமயமான விளக்கம் தருகின்றனர். ஓவியம், படம் என்று மட்டுமே விளக்கம் கூறியவர்கள் அதை (கருத்துப்படத்தை) வரைவது ஒரு நுண்கலையாகும் என்று விவரித்துக் காட்டுகின்றனர். அதாவது “கருத்துப்படம் என்பது தாள் நறுக்கு, நிறமுள்ள நுண்ணிய சுவர்க்கோல ஓவியம், மொசைக் மற்றும் ஓவியத்திரை ஆகியவை மீது வரையப்படும் ஒரு நுண்கலையாகும்” (8) என்று விளக்குகின்றனர். அதனால் செய்திகளுடன் தொடர்புபடுத்தி விளக்க முற்பட்டனர். அதனால் செய்திகளுடன் தொடர்புடைய விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு கருத்துப்படத்திற்கு இன்னொரு புதிய விளக்கம் தந்தனர். நாளிதழில் வருகின்ற கருத்துப்படத்திற்கு “கருத்துப்படம் ஒரு மனிதனின் உலகம் பற்றிய பார்வையாகும்” (9) என விளக்கம் கூறுகின்றனர். இதைப்பற்றி, கருத்துப்படம் ஒரு செய்தியினைப் பற்றி முழுமையாகச் சிந்திக்கச் செய்வதாகவும், தெரிந்து கொள்ளத் தூண்டுவதாகவும் அமைகின்றதாக, வரையறையும் செய்கின்றனர். இந்தத் தூண்டுகோலைக் கொண்டும், பின்னாளில் விளக்கம் தர முற்பட்டனர்.


“கருத்துப்படம் என்பது செய்தி விளக்கப்படமாகும். பத்திரிகைகளில் சொல்லப்படுகின்ற செய்திகள் பலவற்றில் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் செய்தி கருத்துப்படமாக வரையப்படுகிறது” (10) இவ்விளக்கம் செய்தியைக் கருத்துரு கொண்டு காண முயலும் ஒரு கருத்துப்பட ஓவியனின்(cartoonist) விளக்கமாக எடுத்தாள முடியும். ஏனென்றால் கருத்துபட ஓவியன், தான் வரைகின்ற ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு செய்தியை உணர்த்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவைகளாக இருப்பான் என்று அனைவரும் அறிந்ததே. இதை அடியொற்றியே இரத்தினச் சுருக்கமாக, “புரிந்து கொள்ள இயலாக் கருத்துக்களையோ, செய்திகளையோ எளிதாகப் புரிந்து கொள்ள வைப்பது கருத்துக்கள் வெகு விரைவில் மக்களிடம் சென்றடைய, வாசகர்கள் அதிக சிரத்தை எடுக்காமல் செய்தியைக் கிரகித்துக் கொள்ள இதழ்களில் வெளிவரும் கருத்துப் பொதிந்த வரைபடமாகும்” (11) என்று விளக்கம் தரப்படுகின்றது. இதிலிருந்து இதழ்களில் படங்களின் அதாவது கருத்துப்படங்களின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே சென்றது. அத்தகைய நிலையில் இன்னொரு விளக்கம் கொடுக்கப்பட்டது.

“கருத்துப்படம் பெரும்பாலும் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறுவதாக இருக்கும்” என்று ரவிராஜ் கூறுகின்றார். (12) இவ்விளக்கம் கருத்துப்படத்தின் கருவை உள்ளடக்கிய விளக்கமாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவேப் பின்னாளில் மையக்கருவாக உருவானது என்றே சொல்லலாம். சுருக்கமான விளக்கத்தைக் கொண்டு அத்துடன் சில கூறுகளைப் பின்வந்தவர் சேர்த்து, “கருத்துப்படம் என்பது நடப்பு நிகழ்ச்சிகளைப் படங்களாக வரைந்து, ஒரு சில வரிகளிவ் கருத்தையும் விளக்கி, மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாக இருக்கிறது” என்கிறார் இதழியல் பேராசிரியை கலைவாணி. (13)

“ஒரு செய்தியை, தனது சொந்தக் கருத்துக்களைச் சொற்களாக விளக்கும் போது அது ‘தலையங்கம்’ (14) எனவும் கூறப்படுகிறது. நாளடைவில் கருத்தைக் கொண்டு வெளியாகின்ற படங்கள் “படத்தலையங்கம்” (15) என்றும் கூறப்படலாயின. படத்தலையங்கம் என்று கூறப்படும் கருத்துப்படம் “அடிக்குறிப்பு இல்லாமலேயே கருத்துத் தெரிவிப்பது” (16) என்ற விளக்கத்தையும் குறிப்பதாக அமைகின்றது.

கருத்துப்படத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைத் தொகுத்துக் காணும் போது, கருத்துப்படம் பற்றிய பொதுவான கருத்தினைப் பெற முடிகின்றது.

கருத்துப்படம் என்பது ஒரு வரைபடம். அது தொடர் வரைபடமாகவும் வெளிவருகிறது. கல்கி இதழில் வெளிவருகின்ற படங்கள் தொடர் கருத்துப்பட வரிசையில் இடம் பெறுவதாக உள்ளன. அடுத்து, கருத்துப்படம் செய்தி விளக்கப்படமாகும். இது ஏதாவது ஒரு கருத்தை உள்ளீடாகக் கொண்டு வரையப்படுவதாகும். அந்தக் கருத்து மக்களைச் சென்றடைய வேண்டும். உடனே சென்றடைய வேண்டும். அந்த வகையில் புரிந்து கொள்ள இயலாத கருத்துக்களையோ, செய்திகளையோ எளிதாகப்படங்களின் மூலம் புரிய வைப்பது என்பது இதன் தன்மையாகும். இது மட்டும் அல்லாமல் விறுவிறுப்பாக இருப்பதற்காக, அரசியல் கருத்தாக்கங்களைச் சார்ந்ததாகவும், சமூகச் சீர்திருத்தக் கருத்தாக்கங்களை வெளிக்காட்டுவதாகவும் இருக்கும். சிரிப்பைக் கொண்டு சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கும் என்றும் கூறலாம். சில வினாடிகளுக்குள், படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே கருத்தை உணரத்தக்கதாக இருக்கும் கருத்துப்படம் அன்றாட நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகக் கருத்துச் செறிந்ததாக இருக்கும். இத்தகைய கருத்துப்படங்களை இதழ்கள் விரும்பி வெளியிடுகின்றன.


வெளியிடுவதன் நோக்கம்

கருத்துப் படங்களை இதழ்களில் வெளியிடுவதன் நோக்கம் தலையங்கச் செய்திகளை எளிமையாக வாசகர்களைப் புரிந்து கொள்ளும்படிச் செய்வதேயாகும். கடினமான செய்திகளைப் படிப்பவர்கள் (வாசகர்கள்) எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும், கருத்துக்கள் வெகு விரைவில் மக்களைச் சென்றடையும் வகையிலும் வாசகர்கள் அதிகச் சிரமப்படாமல் செய்திகளை உள்வாங்கிக் கொள்ளவும் கருத்துப்படங்களை இதழ்களில் பயன்படுத்துவதன் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கூறலாம்.

“ஆசிரியக் கருத்துரைகளையும், அரசியல், சமூகக் கேடுகளையும் செய்தித்தாள்களில் (நாளிதழ்களில்) தலையங்கமாக வெளிவரும் செய்திகளையும் படமாகக் கருத்துப் பொதிந்ததாக வெளிப்படுத்துவதே நோக்கமாகும்” (17) என்று கருத்துப்படங்கள் வெளியிடுவதன் நோக்கத்தை ஏ. ஜி. வெங்கடாச்சாரி தெளிவுபடுத்துகிறார். இவ்வகையில்தான் பாரதியாரின் கருத்துப்படங்கள் அக்காலத்தில் இதழ்களில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கனவாகும்.


இதழ்களில் கருத்துப்படங்கள்

“ஒரு புத்தகம் நூறு பக்கங்களில் சொல்லக்கூடிய ஒரு கருத்தை ஒரு படம், பார்த்தவுடனேயே புலப்படுத்தும் சக்தி வாய்ந்தது” (18) என்று தந்தையரும் மக்களும் என்ற நூலில் ஜலான்டர்கணேவ் கூறுகிறார். செய்தியைக் கொடுப்பதோடு படத்தையும் சேர்த்துக் கொடுப்பதால் ஒரு செய்தி பற்றிய அழுத்தமானப் பதிவுகள் வாசகர்கள் மனதில் எழுகின்றன. இதற்கு மூலகாரணமாக அமைபவை படங்களே. 1835-இல் செய்தி ஒன்றைச் சித்தரித்துக் காட்ட முதல் தடவையாக ஜேம்ஸ் கார்டன் பென்னெட் என்பவர் இதழில் படத்தை வெளியிட்டார். அப்போது வெளியான படத்தில் தெளிவான உருவத்தைக் கண்டுபிடிப்பதே சிரமமாக இருந்தது. ஆதன்பின் ‘லித்தோ’ முறையில் 1840-ஆம் ஆண்டு நல்ல சித்திரங்களை வெளியிடுவது சாத்தியமாக இருந்தது” (19)

அதைத் தொடர்ந்து படங்களின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருந்தன. சித்திரங்களை ஒழுங்காகப் பயன்படுத்தும் பழக்கத்தை “1873-இல் அமெரிக்க தினசரி, நியூயார்க் டெய்லி கிராஃப்” (20) செய்தது. இதை அடியொற்றி இதழ்களில் சித்திரங்கள் என்பது பழக்கமாக நிலைத்து விட்டது. செய்திகளை உருவாக்கப் பயன்படும் சொற்களைப் போலவே படங்களின் வெளியிடும் செய்தி, வெளியீட்டின் பகுதி என்று தற்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்தும் வருகின்றது.

முடிவுரை

முக்கிய நிகழ்ச்சிகளின் படங்கள், பத்திரிகைகளில் வெளிவருவது நடைமுறையில் இருந்தும் வருகின்றன. நிகழ்ச்சிகளின் படங்கள், நிகழ்கின்ற சம்பவங்களை நெருங்கிப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வினை ஏற்படுத்துகின்றன. மேற்கண்ட ஆதாரங்களை வைத்து அணுகினால் புகைப்படங்கள் மட்டுமன்றி, பல்வேறு விதமான சித்திரப் பகுதிகளையும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் காணலாம். அவ்வாறு வெளிவருகின்றனவற்றுள் கருத்துப்படங்களும் சிறப்பிடம் பெறுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அடிக்குறிப்புகள்

1. ஏ.ஜி. வெங்கடாச்சாரி, ஜனநாயகத்தில் பத்திரிகை பணி, ப.121.

2. எஸ்.ரவிராஜ், கார்டூன்கள் வரைவது எப்படி?, ப.3.

3. Everett Edgar Sentman (Editor-in-chief), The American Encyclopaedia, The United Educators, INC. Chicago, 1966, Volume-3, P.179.

4. எஸ். ரவிராஜ், முன்னது, ப.4.

5. Everett Edgar Sentman, P.178.

6. New Standard Encyclopaedia, Standard Educational Corporation, Chicago, Volume-3, P.145.

7. W.Goet Z Philp, (Editor-in-chief), The New Encyclopaedia Britannica, 1986, 15th Edition Volume-2, PP.910-911.

8. Robert S.Phillips (Editor-in-chief), Funk & Wagnalls, New Encyclopaedia, Funk & Wagnalls, INC, USA, Volume-3, P.183.

9. David Wain Wight, Journalism made simply, P.173.

10. Allen Hutt, Newspaper Design, P.183.

11. Weekly Newspaper Writing and Editing, P.276.

12. எஸ். ரவிராஜ், முன்னது, ப.3.

13. சோ.கலைவாணி, பத்திரிகைக்கலை, ப.89.

14. மேலது.

15. மேலது.

16. கி.ராசா, இதழியல், ப.102.

17. ஏ.ஜி.வெங்கடாச்சாhp, முன்னது, ப.121.

18. மேலது. ப.116.

19. மேலது. ப.117.

20. மேலது. ப.118.

(குறிப்பு: துணை நூல் பட்டியலுக்கான நூல்களைப் பட்டியலிடும் போது நூலின் பெயர், நூலாசிரியர்(கள்), வெளியீட்டாளர் (பதிப்பகம், ஊர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பு ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் - ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p139.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License