Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழர் பண்பாட்டில் கள்

முனைவர் சி. இராமச்சந்திரன்
ஆராய்ச்சி உதவியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை - 600 113.


திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்சாரம் குறித்து விவாதிப்பது தற்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

சங்ககாலத்தில் ‘கள்’ தேறல், தோப்பி, கள், என்று பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. இது தேன், நெல்லரிசி, பழங்கள், பனைமரம் போன்றவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. நீண்ட நாட்கள் வைத்திருந்து உண்ணும் கள் தரும் போதையை “தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்” (புறம்: 392) என்பதால் அறியமுடிகிறது. அதாவது, தேள் கடித்தால் ஏறும் விடத்தைப்போன்று இக்கள்ளானது போதையைத் தரும் என்ற பொருளில் இவ்வடி வருகின்றது. “பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண்: 237) அடங்கிக் கிடக்கும் பாம்பு ஞெரேலெனச் சீறி எழுவது போன்று, உண்டவுடன், உண்டவர் உள்ளத்தில் வெறியை, களிப்பை ஏற்ற வலிய தன்மை உடையது என்னும் பொருளில் இவ்வரி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. “பாம்புக் கடுப்பன்ன தோப்பி” (அகம்.378), “அரவு வெகுண்டன்ன தேறல்” (புறம்.379) என்ற வரிகளும் கள்ளின் வீரியத்தைக் குறித்து நிற்பதைக் காணலாம். மேலும் கள்ளினை நீண்ட நாட்கள் வைத்துக் குடிக்கின்ற வழக்கத்தினை “பழம்படு தேறல்” (சிறுபாண்: 159) என்னும் சிறுபாணாற்றுப்படை பாடல் வரியால் அறியமுடிகிறது.

“கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாள்ஆ தந்து, நறவுநொடை தொலைச்சி” (பெரும்பாண்.140-141)


என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள், பகை மன்னருடைய ஆவினைக் கவர்ந்து வந்த வீரன் ஒருவன் அதனைக் கொடுத்துத் தனது பழைய கள்விலைக் கடனைத் தீர்த்ததைக் குறிப்பிடுகின்றது. மேலும், “குற்றாத கொழியல் அரிசியை நல்ல களியாகத் துழாவி அட்ட கூழை, மலர்ந்த வாயையுடைய தட்டுப்பிழாவில் இட்டு உலரும்படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கண் கிடக்கும் பழஞ்சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல நெல் முளையை இடித்து அதனை அதிலே கலந்து, அஃது இனிமை பெறும்படி இரண்டு பகலும் இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரில் வேகவைத்து நெய்யரியாலே வடிகட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்” என்று கள் தயாரிக்கும் முறையினை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்: 275 - 282) குறிப்பிடுகின்றது. தமிழர்கள் கள் தயாரித்த முறையினையும், அதை உருவாக்கிப் பருகுவதில் இருந்த அவர்களின் விருப்பத்தினையும் இதனால் உணர்ந்துகொள்ள முடிகிறது. மூங்கில் குழாய்களில் தேனினை நிரப்பித் தேறல் என்னும் மதுவகையினைத் தயாரித்துள்ளதை “வேய்ப் பெயல் விளையுள் தாகட் தேறல்” (மலைபடு.171) என்று மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. கள் உண்பவர் பலரும் செல்லும் மனைகளில், சிறந்த கள்ளின் விலையை எடுத்துக் காட்டும் கொடிகள் பறந்தது என்பதை, “பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு” (பட்டினப்.179-180)

என்ற பட்டினப்பாலை அடிகள் குறிப்பிடுகின்றன.


பெண்களும் சங்ககாலத்தில் கள்ளுண்டு மகிழ்ந்துள்ளனர் என்பதை “தாம் உடுத்திய பட்டாடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கென மெல்லிய வெண்ணிறத் துகிலை உடுத்துவர். கள் உண்டலைக் கைவிட்டு, இனிய காமபானத்தை விரும்பி உண்பர். மதுவின் மயக்க மிகுதியால், மகளிர், தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்துத் தங்கள் கூந்தலில் சூடிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர், தங்கள் கண்ணியாக நினைத்துத் தங்கள் தலையில் சூட்டிக் கொள்வர்” (பட்டினப்.107-110) என்னும் கூற்றால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் இரவெல்லாம் இவ்வாறு கள் குடித்தும், களவியில் ஈடுபட்டும் இருக்கும் பெண்கள் இரவின் கடையாமப் பொழுதில் துயில் கொள்ளுவர் என்று குறிப்பிடுகின்றது பட்டினப்பாலை.

கள் விற்கப்படும் மனைகளில் அதன் விலையுடன் கூடிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன என்பதை,

“பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு” (பட்டினப்.179-180)


என்ற பட்டினப்பாலையடியால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கள் விற்கும் இடங்களில் கொடி பறந்து கொண்டிருந்ததை, “கட்கொடி நுடங்கும் ஆவணம்” (பெரும்பாண்.337) “கட்கொடி நுடங்கும் ஆவணம்” (பதிற். 98:10), “நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்” (அகம் 126:10), “கள்ளின் களிநவில் கொடி” (மதுரைக். 372) என்னும் பாடல் வரிகளால் அறியமுடிகிறது. மேலும் களிப்பினைத் தரும் கள்ளிற்கு விலை கூறி விற்றதைக் “கள்ளோர் களி நொடை நுவல” (மதுரைக்.662) , “களம் தோறும் கள் அரிப்ப” (மதுரைக்.753) என்னும் மதுரைக்காஞ்சி பாடலடிகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு கள், அவற்றை உற்பத்தி செய்யும் முறை, விற்பனை செய்யும் இடம், கள் குடித்த மக்கள் என்று பல்வேறு தகவல்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து பெறமுடிகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமுதாயத்தில் மன்னர் முதற்கொண்டு விளிம்புநிலை மக்கள் வரை கள் குடித்திருக்கின்றனர் என்பது ஒருபுறமிருந்தாலும், அவர்கள் குடிப்பதெற்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அக்காலத்தில் குடி கலாச்சாரத்தால் எந்தக் குடும்பமும் சீரழிந்ததாகத் தெரியவில்லை. கவிஞர்களும், கலைஞர்களும், பெண்களும் கள் குடித்துள்ளனர். அதியமான் ஒளவைக்கு கள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறான். இது பெண்களும் பாகுபாடின்றிக் கள் குடிப்பதற்கு இருந்த சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகின்றது. சங்ககாலத்தில் கள் உணவாகப் பார்க்கப்பட்டது. அது இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்டது. எந்த வகையிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதது. அது அவர்கள் செய்யும் தொழிலை முடக்கிப்போடவில்லை. அப்படியா இருக்கின்றது இன்றையநிலை. முற்றிலும் இல்லை என்றுதான் கூறமுடியும்.

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்

1. அகநானூறு - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2. பத்துப்பாட்டு - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

3. பதிற்றுப்பத்து - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

4. புறநானூறு - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p218.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License