இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பெண்ணியம் குறித்த கருத்தியல்புகள்

முனைவர் பா. தமிழரசி


பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும் அவர்களுக்கான ஒடுக்கல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன என்பதை மையப்படுத்தி இக்கட்டுரை அமைகின்றது.

இன்றைய காலத்தில் பெண்கள் பல்வேறு அலுவலகப் பணிகளிலோ, பொறுப்புகளிலோ முன்னேறி வர வேண்டுமென்றால் சமூக ஒடுக்கல்களைத் தாண்டி வர வேண்டும். சமூகவியல் நிலைப்பாடுகளுள் ஒன்றான சமூக ஒடுக்கல்களை பெண்கள் அறியாமலே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெண்மொழி

பெண்மொழியை உளவியல் அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம்.

1) தனி மனித நனவிலி

2) கூட்டு நனவிலி

கூட்டு நனவிலியில் பாரம்பரியக் கூறுகள் நிறைந்து கிடக்கும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. கல்வி கற்றாலும் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

பெண்மொழி என்பது இருப்பதை உடைக்காமல் மரபை காக்க வேண்டும்.

“தன்னுறு வேட்கை கிழவனுக்குரித்தே கிழவிக்கில்லை”

பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே உரியது. தன்னுடைய பாலியல் வேட்கையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை பெண்களுக்குக் கிடையாது. ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில், தான் எப்படி திருமாலை அடைய வேண்டும், அடைந்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை வெளிப்படையாக கூறுகிறாள். இது இலக்கியங்களில் ஒரு மடைமாற்றமாக உள்ளது. ஆனால், இக்கருத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.



பெண்மொழி குறித்து பெண்ணியவாதிகள்

பெண்மொழி என்பது நனவிலி மனத்தில் தோன்றுவதை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும். இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடல்களை உருவாக்க வேண்டும்.

பெண்ணியவாதிகளான சல்மா, குட்டி ரேவதி, சக்தி ஜோதி, சுகிர்தராணி, வெண்ணிலா போன்றோர்கள் பெண்மொழி குறித்து பேசியுள்ளனர். பெண்ணின் மொழி வீரியமான ஒன்று.

“நானும் என் மொழியும் சற்று கடுமையாகவே வெளிப்படக்கூடும்.”

என்று சல்மா கூறுகிறார். பெண்ணின் உணர்வுகளைப் பெண்ணே உணர்ந்து எழுத முடியும். ஆண் கண்களால் கண்டு எழுவதை விட உணர்ந்து எழுதும் பெண்ணின் எழுத்துக்கு வலி அதிகம். எடுத்துக்காட்டாகப் பிரசவ வலி, மாதவிடாய் வலிகளைப் பெண்களால் தான் எழுத முடியும்.

திருமணம்

பெண்ணுக்குத் திருமணம் என்ற நிகழ்வு மூலமும் சமூக ஒடுக்கல்கள் நிகழ்கிறது. நம் சமூகத்தில் குடும்பம் என்ற கட்டமைப்பு மிகச்சிறந்த ஒன்றாகும். அது வெற்றி பெற மனப்பக்குவம் மிகத் தேவையான ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘நான்’ என்ற அகந்தை இல்லாமல் வாழ வேண்டும். இன்றைய ஊடகங்கள் அனைத்தும் விரைவில் முறிந்து போகும் திருமணங்கள் பற்றியும், விவாகரத்து பற்றியும் அதிகமாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமையுமே பலன் அடையும் என்கிறார் பாரதிதாசன்.

“கல்வி கற்ற பெண் களர்நிலம் போன்றவள்; அங்கே
புல் விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை.”


கல்வி கற்ற பெண்ணால் குடும்பம் சிறந்து விளங்கவதை குடும்ப விளக்கு மூலமும், கல்வியில்லாத பெண்ணால் குடும்பம் எவ்வாறு சீரழிந்து போகும் என்பதை இருண்ட வீட்டின் மூலமும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.



வன்முறை

நாகரீகம் அடைந்த இன்றைய நிலையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. தந்தை வழிச் சமுதாயத்தில் பெண்ணை ஒடுக்க ஆண் கையாண்ட ஒரே கருவி அவளை வன்முறை செய்தல் என எண்ணினான். பெண் வன்முறையை இரண்டாகப் பகுக்கலாம்.

1. மனத்தால் வன்முறை செய்தல்

2. உடலால் வன்முறை செய்தல்

பெண்களுக்கு எதிரான வன்முறை குடும்பம், சமூகம், சமயம், மதம் என அனைத்திலும் நிகழ்கின்றது. ஆணாதிக்கச் சமுதாயம் வன்முறை நிகழ்த்தி அதை நியாயப்படுத்தவும் செய்கிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் மனதளவில் அதிகம் வன்முறைக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். உடலால் ஆன வன்முறை அடித்தல், உதைத்தல் போன்றவையாகும். இளம் பெண்ணின் மனதைச் சீரழிக்கும் வகையிலே பெரும்பாலான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக; வரதட்சணை குறித்து பெண்களை மையமிட்டே பெரும்பாலான தொடர்கள் வெளிவருகின்றன.

வைரமுத்து ‘இந்த பூக்கள் விற்பனைக்கல்ல’ என்ற கவிதைத் தொகுப்பில் வரதட்சணை குறித்து பேசியுள்ளார். வரதட்சணை என்ற வில்லை ஒடிப்பதற்கு இன்றைய இராமர்களுக்கு இரத்தமில்லை என்று ஆண் வர்க்கத்தைச் சாடுகின்றார். மாறாக, பெண்களை ஒருங்கே நின்று எதிர்த்துப் போராடுமாறு கூறுகின்றார்.

“எங்கே சீதைகளே
கொஞ்சம் சேருங்களேன்!”


என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் வரதட்சணைக் கொடுமை குறித்து ஒரு பெண்ணின் குரலாக ‘அரளிப்பூ அழுகின்றது’ என்ற தலைப்பில் பாடியுள்ளார்.

“பூக்களிலே
நானும் ஒரு பூவாய் பிறப்பெடுத்தேன்!
பொன் விரல்கள் தீண்டவில்லை
பூ மாலை ஆகவில்லை”


வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வரதட்சணை என்ற வேரை களைய வேண்டுமானால் ஆணும் பெண்ணும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.



பெண் கல்வி

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பெண்கல்வியின் விழுக்காடு உயர்ந்து இருக்கிறது. எனினும் மேற்படிப்பு படித்த பின்பு கூட முழு சதவிகிதம் பெறச் சமூகம் விடுவதில்லை. திருமணம், பாதுகாப்பு என்ற நிலைகளால் பெண்கல்வி பாதியிலே நின்றுவிடுகிறது. பாலியல் வன்முறை என்பது கட்டாய வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, கண்ணியக் குறைவாக நடத்தல் போன்றவையாகும்.

உளவியலின் தந்தையாகிய பிராய்டு கூறும் இட் என்ற உணர்வு அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதை யாரிடம் வெளிக்காட்ட வேண்டுமோ அவர்களிடம் தான் வெளிக்காட்ட வேண்டும். ஆனால் பத்து வயது குழந்தையிடம் தனது இன்ப உணர்வை வெளிக்காட்டும் கீழ்த்தரமான எண்ணமுடைய ஆண்களும் இருக்கின்றனர்.

இல்லற வாழ்க்கையில் பெண்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும். ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ உடையில் இல்லை. புதுமையான எண்ணங்களில் இருக்கிறது. சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற நுண் அறிவு பெண்களுக்கு இருக்க வேண்டும். காலத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கில மொழி அறிவோடு துணிச்சலாக வாழ்வில் முன்னேற வேண்டும்.

பெண்ணைப் பற்றி சுகன்யா ஜெகந்நாதன் எழுதிய கவிதை இது;

“பெண்ணே! நீ ஒரு மகாசக்தி
கருவில் உருவாகி கள்ளிப்பாலில் கரைவதற்கு
தலையெழுத்தென்னடி உனக்கு
அன்னையின் தாலாட்டைக் கேட்டு - பின்
தாலாட்டுப் பாடும் நிலவல்லவோ நீ
அன்பான மகளாய் பிரியமான சகோதரியாய்
காதல் மனைவியாய் பாசமுள்ள தாயாய்
மகளாகிய மருமகளாய் பேரக்குழந்தைகளை
கொஞ்சி மகிழும் பாட்டியாய்
எத்தனை ஜென்மமடி நீ எடுப்பாய்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் ஆளுகின்றாய்
ஆண்களுக்கு நிகராகக் கலக்குகிறாய்
தலையெழுத்தென்னடி உனக்கு
கள்ளிப்பாலில் கரைவதற்கு”


மேலும், ‘நீ உன்னை அறிந்தால்’ வாழ்வில் வெற்றிப் பெறலாம்.

ஆகவே பெண்கள் தனக்கான இயல்பைத் தொலைக்காமல் இருப்பதிலும், அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் அவள் கற்ற கல்வி எவ்வகையில் உதவுகிறது என்பதனை பெண்ணானவள் மாற்றி யோசிக்கப் பழக வேண்டும். அத்தகைய சிந்தனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பெண் தன் தனித்துவத்தில் காலூன்றி வெற்றியைப் பெற முடியும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p99.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License