இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

தமிழ் பக்தி இலக்கியத்தில் நாயக - நாயகி பாவம்

மு. சங்கர்

தமிழ்மொழியைப் பக்தி மொழி என்பர். அதற்கேற்ப நாயன்மார்களும் ஆழ்வார்களும் தத்தம் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்கள் பல பாடி, பக்தி இயக்கத்திற்கு உயிர் கொடுத்தனர் என்றால் அது மிகையன்று. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சங்க அகத்துறை மரபினைப் பின்பற்றி, பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். இவர்கள் சங்க அகத்துறையில் இடம் பெறும் பாத்திரங்களான தலைமகன், தலைமகள், தோழி, செவிலி, நற்றாய் முதலியோரைக் கொண்டு, அவர்களுடைய கூற்றுகளாகத் தம்மைப் பாவித்துக் கொண்டு, பாடுகின்றனர். இந்த மரபினையே ஆச்சர்ய ஹிருதம், ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு என்கின்றது. இக்கட்டுரை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பின்பற்றிய நாயக - நாயகி பாவம் பற்றி ஆராய முற்படுகின்றது.

நாயக - நாயகி பாவம்

நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவன் மீது அதிகமான பற்றுக்கொண்டு, தம்மை நாயகியாகவும் அஃதாவது தலைமகளாகவும், இறைவனை நாயகனாகவும் அஃதாவது தலைமகனாகவும் பாவித்துப் பாடுவதையே நாயக - நாயகி பாவம் என்கின்றோம். இறைவன் ஒருவனே ஆண்மகன். பிற உயிர்கள் எல்லாம் பெண்மை உடையவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு நாயக - நாயகி பாவம் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் புனையப்படுவதைக் காண்கின்றோம்.

சங்க கால ஆண்பாற் புலவர்களின் கூற்றுகள் பல பெண்பாற் கூற்றுகளாக மிளிர்வதைக் காணலாம். இதனை அடியொற்றியே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர் என்றால், மிகையன்று.

நாயன்மார்களும் நாயக - நாயகி பாவமும்

அடியவர்கள் தம்மை இறைவனின் அடிமையாகவோ, இறைவனைத் தந்தையாகவோ மகனாகவோ கொண்டு இறைவன் மீது அன்பு செலுத்துவர். இதனை ஒரு கற்பனைக் கூறு எனலாம்.

சம்பந்தரும் நாயக - நாயகி பாவமும்

சம்பந்தர் பாடல்கள் திருக்கோவில்களை மையமாகக் கொண்டு எழுந்தவை. இவர் இறைவனைத் தந்தை உறவில் பாவித்தார். அவ்வாறு இருப்பினும் இறைவனின் திருவுருவம் மற்றும் அருட்செயல்கள் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன. எனவே, தன் காதல் உணர்வை வெளிப்படுத்த இவ்வாறு பாடுகின்றார்.

நலன் இழந்து ஆற்றாமை மிக்க தலைமகள், தன் தலைமகனுக்குப் பல பொருட்களைத் தூதாக விடுக்கின்றாள். வண்டு, குருகு, நாரை, அன்னம், அன்றில், குயில், கிளி முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது விடுக்கின்றாள். இத்தூதினைக் காணும்போது சங்க காலத் தலைமகளின் நிலைமைப் புலப்படக் காணலாம்.



சம்பந்தர் தம்மை நாயகியாகப் பாவித்துக் கொண்டு, இறைவனாகிய நாயகன் மீது தும்பியைத் தூது விடுக்கின்றார்.

“வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே”
(60:645:1-4)

அடுத்து சம்பந்தர் தான் விரும்பும் தலைமகனை அடைய மாட்டாத நிலையில் அவன் பெயரையாவது கேட்டுக் கொண்டிருக்க ஆசைப்படுவதாகக் கிளியை நோக்கிப் பாடுகின்றார்.

“சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவன் மொய்ப்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே”
(60:654:1-4)

சம்பந்தருக்கும் இறைவனுக்கும் இருக்கும் உறவு மகன் - தந்தை உறவு என்றாலும் திருத்தோணிபுரம் என்னும் பதிகமானது, இறைவன் மீது காதல் கொண்ட தலைமகள் பாடுவதாக அமைகின்றது.

அப்பரும் நாயக - நாயகி பாவமும்

இறைவனின் திருவுரு ஈடுபாடு, இறைவனிடத்தில் காதல் உணர்வைப் பிறப்பிக்க, அகத்துறைப் பாடல்களாக வெளிவருவதை அப்பர் தேவாரதத்தில் காணலாம். அகத்துறையில் அமைந்த பதிகங்கள் சம்பந்தர் பாடியவற்றினும் அப்பர் தேவாரத்தில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. இருந்த போதிலும் அப்பரின் உணர்ச்சி வேகம் அகத்துறைப் பாடல்களிலும் தெளிவாக வெளிப்படக் காணலாம்.

“சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிசென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ”
(4.12:114)

மேலும் இவர் தலைமகள் உணர்வில் நின்று தலைமகனிடம் தூதுவிடும் பாங்கிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.



பக்தி இலக்கியப் பாடல்களிலேயே சிறந்த கவிதையாகக் கருதத்தக்க அகத்துறைப் பாடல் ஒன்று அப்பர் பாடலாக அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”
(திருவாரூர் பதிகம்,7:1-4)

இப்பாடலே அப்பரின் நாயக - நாயகி பாவத்தைப் புலப்படுத்தக் காணலாம். இதன் அடிக்கருத்துப் பின்வருமாறு அமையக் காணலாம்.

இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து, செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது.

சுந்தரரும் நாயக - நாயகி பாவமும்

திருப்பைஞ்ஞீலி என்னும் பதிகத்தில் சுந்தரர், தம்மைத் தலைமகளாகப் பாவித்துப் பாடுவதாக உள்ளது.

“குரவம் நாறிய குழலினார் வளை
கொள்வதே தொழிலாகி நீர்
இரவும் இம்மனை அறிதிரே இங்கே
நடந்து போகவும் வல்லீரே”
(7:36:6)

என்றும்

“நீறுநும்திரு மேனி நித்திலம்
நீள்நெடுங் கண்ணி னாளொடு
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து
இடுகிலோம் பலி நடமினோ”
(7:36:5)

என்றும் பாடுகின்றார்.

சுந்தரர் தம்மை தலைமகளாகப் பாவித்து, ஐயம் கேட்டு வரும் இறைவனுக்குப் பலி தரமாட்டோம் என்கின்றார். அதற்கான காரணத்தையும் கூறுவதாக அமைகின்றது இப்பதிகம்.



மாணிக்கவாசகரும் நாயக - நாயகி பாவமும்

சங்க அக இலக்கியங்களில் பிரிவு பற்றிய பாடல்களே அதிகம். புணர்வு பற்றிய பாடல்கள் அதற்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. பிரிவும் பிரிவாற்றாமையே காதல் பற்றிய உணர்வுகளை மிகுவிக்கும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் மகளிர் விளையாட்டுகளாக,

1. திருவெம்பாவை

2. திருவம்மானை

3. திருப்பொற்சுண்ணம்

4. திருக்கோத்தும்பி

5. திருத்தெள்ளேனம்

6. திருச்சாழல்

7. திருப்பூவல்லி

8. திருவுந்தியார்

9. திருத்தோள் நோக்கம்

10. திருப்பொன்னூசல்

முதலியவை இடம்பெறுகின்றன.

இவ்விளையாட்டுகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கின்றார் மாணிக்கவாசகர்.

“மாடுநகை வாள்நிலா எறிப்ப
வாய்திறந் தம்பவளம் துடிப்பப்
பாடுமின் நம்தம்மை ஆண்டாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடி
தேடுமின் எம்பெருமானைத் தேடிச்
சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத்து ஆடினானுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே”
(திருப்பொற்சுண்ணம்:205:1-4)

என்று திருப்பொற்சுண்ணத்தில் பாடுகின்றார் மாணிக்கவாசகர்.


அகப்பொருளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மாணிக்கவாசகரின் மற்றொரு படைப்பு திருக்கோவையார் ஆகும். இந்நூலைத் திருச்சிற்றிலம்பக்கோவை என்றும் அழைப்பர். இந்நூல் 400 அகத்துறையில் அமைந்த கோவைப் பாடல்களையும் கொண்டது.

இயற்கையின் காரணமாகத் தலைமகனும் தலைமகளும் சேர்வதை இயற்கைப் புணர்ச்சி என்பர். தன்னுடைய பாங்கர்களோடு தலைமகன் வேட்டையாடுதல் போன்ற தொழில் காரணமாகச் செல்லுகின்ற போது, ஊழின் காரணமாக, அவர்களை விட்டுப் பிரிந்து, தனி வழியில் செல்ல இவனைப் போலவே, தலைமகளும் தன் தோழியரை விட்டு நீங்கி தனியே நிற்க அவளை அவன் காண்பதே காட்சி ஆகும். இதனை மாணிக்கவாசகர்,

“திருவளர் தாமரை சீர்வளர்
காவிகள் ஈசர் தில்லை
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியின்
ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக்
கொடிபோன்று ஒளிர்கின்றதே ”


என்று பாடுகின்றார்.

ஆழ்வார்களும் நாயக - நாயகி பாவமும்

வைணவத்தில் பகவானுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள தொடர்பில் தலைமகன் - தலைமகள் உறவு மிகச்சிறந்தது என்று கூறுவர். இறைவனுடைய தோற்றம் ஆற்றலும் பேரழகும் வாய்ந்தது. இந்த நிலையில் பரமாத்மாவாகிய நாயகனை, ஜீவாத்மாவாகிய தலைமகள் விழைந்து பற்றுவதாகப் பாடுவர். தலைமகன் மீது சென்ற மனதை அகப்பொருளில் அமைத்து நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாசுரங்கள் அமைத்துள்ளனர். பகவான் மீது கொண்ட காதலை, வைணவ உரைக்காரர்கள் ‘பகவத் காமம்’ என்றழைக்கின்றனர்.

நம்மாழ்வாரும் நாயக - நாயகி பாவமும்

சங்க அகப்பொருள் மரபினைத் தழுவி அமைந்த நம்மாழ்வாரின் பாடல்களில், இறைவனாகிய தலைமகனையும் ஆன்மா - தலைமகளாகிய பராங்குச நாயகியையும் தவிர, தாய், தோழி, பாங்கன் ஆகிய மூன்று பாத்திரங்கள் மட்டுமே அமைந்துள்ளன. அகப்பொருள் துறையில் அமைந்துள்ள நம்மாழ்வார் பாசுரங்களில், எல்லாவற்றிலுமே உள்ளுறைப் பொருளும் வெளிப்படைப் பொருளும் அமைந்துள்ளன.

நம்மாழ்வார் தன்னைப் பெண்ணாக அதாவது பராங்குச நாயகியாகப் பாவித்து, எம்பெருமானைத் தோழி, தாய், மகள் ஆகிய நிலைகளில் நின்று அனுபவிக்கின்றார். (பராங்குச நாயகி - பிற சமயங்களாகிய யானைகளுக்கு அங்கசமாக நம்மாழ்வார் திகழ்தல்). திருமாலாகிய நாயகனின் பிரிவைப் பொறுக்கமாட்டாத பராங்குச நாயகியின் நிலையை அவளது தாய் கூறுவதாக அமைந்துள்ள திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றைக் காண்போம்.

“கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்ந்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன் கிடக்கையீ தென்னும்
ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே”
(3151:1-4)


தலைமகனைப் பிரிந்த தலைமகள் காம மயக்கத்தால் அஃறிணைப் பொருட்களையும் உயர்திணைப் பொருட்களையும் தூது விடுப்பது அகப்பொருள் துறையில் மரபு. அஃறிணைப் பொருட்களை அங்ஙனம் விளித்துக் கூறுவதைக் ‘காமம் மிக்க கழ்படர் கிளவி’ என்பர்.

திருவாய்மொழியில் வைகல் பூங்கழிவாய் நாராய், பொன்னுலகாளீரோ, அஞ்சிறைய மடநாராய், எம்கானல் அகம்கழிவாய் ஆகியவை தூது விடும் பாசுரங்களாக அமைந்துள்ளன. இந்த நான்கு பாசுரங்களும் ‘மகள் பாசுரங்களாகவே’ அமைந்துள்ளன. நம்மாழ்வார், தலைமகளாகிய பராங்குச நாயகியின் நிலைமையை ஏற்றிக் கொண்டு இப்பாசுரங்களைப் பாடியுள்ளார். பராங்குச நாயகி இப்பாசுரங்களில் நாரை, குயில், அன்னம், கிரௌஞ்சப்பறவை, குருகு, வண்டு, கிளி, நாகணவாய்ப்புள், தும்பி, காற்று, மேகம் ஆகியவற்றைத் தலைமகனாகிய எம்பொருமானிடம் தூது அனுப்புகின்றாள்.

“அஞ்சிறைய மடநாராய் அளியத்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆஆ என்றுஎனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்தாற்கு என் விடுதூதாய் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ”
(2932:1-4)

திருமங்கை ஆழ்வாரும் நாயக - நாயகி பாவமும்

திருமங்கை ஆழ்வார் பாடும் திருநெடுந்தாண்டகப் பாசுரங்கள் பரகால நாயகியின் தெய்வீகக் காதலை அறிவிக்கும் தன்மையுடையனவாகத் திகழ்கின்றன. இப்பிரபந்தம் 30 பாசுரங்களைக் கொண்டது. தலைமகள், எம்பெருமாளாகிய திருமால் மேல்கொண்ட காதலை, திருநெடுந்தாண்டகப் பாசுரங்களில் ஆழ்வார் பாடுகின்றார்.

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின்தாழ
மகரம் சேர்குழை இருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம்போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே”
(2072:1-4)

தலைமகனாகிய, கண்ணபுரத்தில் உறையும் பெருமானின் திருவருள் கிடைக்கப் பெறாத ஆழ்வார், தன்னைப் பரகால நாயகியாகப் பாவித்துக் கொண்டு, தலைமகனின் அன்பை நினைத்து ஏங்கும் தலைமகளைப் போல் தனது ஏக்கத்தைத் தெரியப்படுத்துகின்றார்.

தன்னை நாயகியாகவும் எம்பெருமானை நாயகனாகவும் பாவித்துக் கொண்ட திருமங்கை ஆழ்வார் தனக்கு எம் பெருமான் முகம் காட்டாமல் இருந்தால், தான் மடலூர்ந்து, பெருமான் தன்னைக் கைவிட்ட செய்தியை ஊரறியச் சொல்லுவேன் என்கின்றார். இதன் காரணமாக அவர் பாடியவையே பெரிய திருமடலும் சிறிய திருமடலும்.

பெரியாழ்வாரின் காதல்

கண்ணன் ஆண்டாளுக்குக் காதலானாகத் தோன்றியது போல் பெரியாழ்வார்க்குப் பிள்ளையாகவே தோன்றினான் என்று கூறமுடியாது. நாயக - நாயகி பாவத்திலும் இவர் பாடியுள்ளார். அக உணர்வில் நின்று பாடும் போதும் தம்மை நாயகியாகக் கொண்டே பாட வேண்டும் என்பதல்ல. தலைமகள் பாசுரம், தாய்ப்பாசுரம், தோழி பாசுரம் எனப் பல நிலைகளில் பாடியுள்ளார்.

“வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து
மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழவிட்டு
தீங்குழல் வாய்மருந்து ஊதிஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப்பிள்ளை
அழகுகண்டு என்மகள் ஆசைப்பட்டு
விலகி நில்லாது எதிர்நின்று கண்டீர்
வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே”
(4:262:1-4)


இப்பாடல் தாய்ப் பாசுரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆய்ப்பாடிப் பெண்ணொருத்தி கண்ணனிடம் தன்னை இழக்கின்றாள். மகளின் மேனி வாட்டம் கண்டு தாய் வருந்திப் பாடுவதாக உள்ளது இப்பாடல். தலைமகனைக் கண்டு கன்னியர் காமுறுதல், நற்றாய் இரங்கல், தலைவன் பின்சென்ற மகளைக் குறித்துத் தாய் பலபட எண்ணி ஏங்குதல் என்னும் துறைகளில் அமைந்திருப்பினும் இப்பாடல் நாயகன் - நாயகி உணர்வில் எழுந்தவையே. பெரியாழ்வார் கண்ணனிடம் கொண்ட பக்தியே இவ்வாறு வெளிவருகின்றது.

நிறைவாக

1. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயக - நாயகி பாவத்தில் பல பாடல்கள் பாடியுள்ளனர். இவ்வாறு பாடுவதால், அவர்களின் பக்தித்திறமும் இறைவன் மீது கொண்ட காதலும் புலப்படுத்துகின்றன.

2. நாயக - நாயகி பாவத்தை ஓர் இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

3. சங்க அகத்துறை மரபினை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பின்பற்றினர் என்றாலும் சில விதிவிலக்குகளும் (பெண் மடலூர்தல்) காணப்படுகின்றன.

4. நாயன்மார்களின் பாடல்களில் காதல் உணர்வு மிகுந்த அகத்துறைப் பாடல்களைக் காணலாம்.

5. மாணிக்கவாசகர் மகளிர் விளையாட்டுகளைக் கூறுவதன் வழி, தன்னையும் ஒரு பாத்திரமாகப் படைத்துக் கொள்கின்றார். இவருடைய திருக்கோவையார் அகத்துறையில் அமைந்த பாடல்களின் ஒட்டு மொத்தமே.

6. ஆழ்வார்களுள் நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் தம்மை நாயக - நாயகியாகப் பாவித்துக் கொண்டு முறையே பராங்குச நாயகியாகவும் பரகால நாயகியாகவும் வலம் வருகின்றனர்.

துணை நூற்கள்

1. அருணாசலம். ப., பக்தி இலக்கியம், முல்லை நிலையம், சென்னை, 2007.

2. இராமநாதன். வி கரு. (பதி.), சம்பந்தர் தேவாரம், ஸ்ரீ இந்துப் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2008.

3. இராமநாதன். வி கரு. (பதி.), அப்பர் தேவாரம், ஸ்ரீ இந்துப் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2008.

4. இராமநாதன். வி கரு. (பதி.), சுந்தரர் தேவாரம், ஸ்ரீ இந்துப் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2008.

5. தேவராஜன். தே. ந. ச., வைணவமும் ஆழ்வார்களும், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2002.

6. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (மூலம்), லிப்கோ வெளியீடு, சென்னை, 2008.

7. முத்தப்பன். பழ., (உரை), திருக்கோவையார், உமா பதிப்பகம், சென்னை, 2006.

8. ஸ்ரீமத் சுவாமி சித்பவனாந்தர் (உரை), திருவாசகம், ஸ்ரீராம கிருஷ்ண தபோவனம், திருச்சி, 2009.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p123.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License