இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

தமிழில் பொருளணுப் பகுப்பாய்வு அறிமுகம்

இரா. செந்தில்குமார்

முன்னுரை

மொழி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள பயன்படுவதாகும். கருத்துப் பரிமாற்றத்துக்குப் பொருண்மைப் புலப்பாடு அவசியமானது. சொல், தொடர், வாக்கியம் ஆகிய மொழிக்கூறுகளில் பொருண்மைப் புலப்பாடு அமைகின்றது. சொற்பொருண்மை ஏனைய தொடர் மற்றும் வாக்கியப் பொருண்மைகளுக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது.

ஒலிகள் தங்களின் ஒலிக்கூறுப் பண்புகளால் பிற ஒலிகளிலிருந்து வேறுபடுவது போன்று சொற்களின் பொருண்மையும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கும் எனக்கருதி மொழியியல் அறிஞர்களும் மானுடவியல் அறிஞர்களும் சொற்களின் பொருண்மையையும் பல்வேறு பொருளணுக்களின் கட்டுமானங்களாகக் கண்டு பொருளணுப் பகுப்பாய்வில் ஈடுபட்டனர். அதன்வழி ஒவ்வொரு சொல்லும் பொருளணுக்களின் தொகையால் ஆனது என்றும் அவை இணைந்து பொருண்மையாக நிற்கின்றன என்றும் முடிவு செய்தனர்.

1. முன்னோடிகள்

பொருளணுக்கள் குறித்துப் பலரும் ஆராய்ந்துள்ளபோதும் கர்னாப், லையான்ஸ், நைடா, கட்ஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். நைடாவின் பொருளணுப் பகுப்பாய்வு (Componential Analysis of Meaning. 1975) என்ற நூல் பொருளணுக்கள் குறித்து நன்கு ஆராய்கின்றது. கர்னாப் என்ற தத்துவவியலார் பொருளணுக்களைக் குறிப்பால் உணரமுடியும் என்கிறார். மேலும் குறிப்பால் உணரப்படும் பொருட்கூறுகளை நேர் – எதிர் போன்ற பொருளணுக்களால் விளக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்.



2. பொருளணுக்கள்

ஒவ்வொரு சொல்லும் பொருளணுக்களால் ஆனது என்றும், இப்பொருளணுக்கள் இணைந்து ஒரு சொல்லின் பொருண்மையாக வெளிப்படுகின்றன என்றும் முடிவு செய்து அதன் அடிப்படையில் ஆய்வினை மேற்கொள்வது பொருளணுப் பகுப்பாய்வு அணுகுமுறை ஆகும். இது ஆங்கிலத்தில் பின்வரும் பெயர்களால் குறிக்கப்படுகின்றது. (Componential Analysis of Meaning, Lexical Decomposition, Semantic Feature Analysis). இந்தப் பொருளணுக்களானவை பொருண்மைக்கூறுகள் (Semantic Components, Semantic Features, Components of Meaning) என்றும் வழங்கப்படுகின்றன.


இவ்வாறு சொற்கள் தங்களின் பொருண்மையைப் பொருளணுக்களால் அமைத்துக்கொள்கின்றன.

3. பொருளணுக்களும் தமிழ் மரபிலக்கண அணுகுமுறையும்

இனம், பருவம், பால் என்ற பொருட்கூறுகள் பொதுவாக சொற்களின் பொருண்மையில் அங்கமாகின்றன. வினைச்சொற்களில் இவை மட்டுமின்றி செயப்படுபொருட்கள், வினைக்குரிய கருவி போன்ற பொருட்கள், சூழல், வினை சார்ந்த பிற செயல்பாடுகளைக் குறிக்கும் வினைகள் போன்றவை பொருளணுக்களாக நிற்க வல்லன எனலாம்.


தமிழ் மரபிலக்கணங்கள் ஒவ்வொரு சொல்லும் திணை, பால், எண், இடம் போன்றவற்றை வெளிக்காட்டுவதாகக் கூறுகின்றன. இது ஒருவகையில் பொருளணுப் பகுப்பாய்வோடு ஒப்பிட்டு நோக்குதற்குரியது. ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை போன்றவற்றில் எவற்றையேனும் குறிப்பனவாக அமையும் என்ற அணுகுமுறை முழுவதும் பொருளணுப் பகுப்பாய்வு அணுகுமுறையே ஆகும். இவ்வணுகுமுறை இன்றைய மொழியியலில் பெரிதும் போற்றப்படுவதாக இருப்பினும் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வணுகுமுறை மேற்கத்திய மொழியியல் வளர்ச்சியில் மிகப் பிற்காலத்தில் தோன்றியது எனினும் பழந்தமிழில் முன்பே இருந்துள்ளதை இதன்வழி நிறுவமுடிகின்றது.



4. பொருளணுக்களின் வகைகள்

ஒரு சொல்லில் இருவகையான பொருளணுக்கள் இடம்பெறலாம். அவை மையக்கூறுகள், சார்புக்கூறுகள் என்று பாகுபடுத்தப்படுத்தப்படுகின்றன. சொற்கள் குறிப்பிட்ட பொருண்மையை வெளிப்படுத்துவதற்கு இந்தத் தலைமையான பொருளணுக்கள் அவசியமாகின்றன. இதன் அடிப்படையில் தலைமையான பொருளணுக்கள் மையக்கூறுகள் என்றும் ஏனையவைகளை சார்புக்கூறுகள் எனவும் வழங்குவர். ஆக்டன், ரிச்சர்ட்ஸ் போன்றோர் இம்மையக்கூறுகள் சொல்லின் பொருண்மையாக அமைவதாகவும் ஏனையவை அவ்வாறு அமைவதில்லை என்றும் குறி்ப்பிடுகின்றனர். ஆனால், சொல்லின் பொருளணுக்களில் இவ்விருவகை பொருளணுக்களும் பொருண்மை வெளிப்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே மேற்குறிப்பிட்ட கருத்து சிந்திக்கத்தக்கது. மையப் பொருளணுக்களை குறுகிய பொருளணுக்கள், பிரிப்புப் பொருளணுக்கள் என்றும், சார்புப் பொருளணுக்களை விரிந்த பொருளணுக்கள், தொகுப்புப் பொருளணுக்கள் என்றும் குறிப்பிடுவர்.

5. பொருளணுக்களின் உலகப் பொதுத்தன்மை

பொருளணுக்கள் உலகப் பொதுத்தன்மை வாய்ந்தவை என்று லையான்ஸ் குறிப்பிடுகின்றார். ஆனால் இக்கருத்து ஒரு மொழியில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருந்துவதன்று. ஏனெனில் சொல் என்ற மொழிக்கூறு பண்பாட்டுக்கூறுகளையும், சமூகச் சூழல்களையும் தனக்குள் கொண்டது. எனவே பண்பாடு சார்ந்த கூறுகள் சொல்லின் பொருளணுக்களாக நிற்கவல்லன என்பதால் மேற்கண்ட கருத்தும் சிந்தனைக்குரியதாகின்றது.

6. சொற்றொடர்புகளும் சொல்வகைப்பாடும்

ஒரு குறிப்பிட்ட பொருண்மைக்களத்தின் கீழ்வரும் சொற்களின் பொருளணுக்களைக் கண்டறிவதன் வாயிலாக அச்சொல் பிற சொற்களுடன் கொண்டிருக்கும் தொடர்புகளைக் கண்டறியமுடியும். பொதுவாக ஒரு சொல் பிற சொல்லுடன் ஒத்தல் (Idendity), உள்ளடங்கல் (Inclusion) வேறுபடல் (Disjunction), மேலூறல் (Overlapping) என்ற நால்வகைத் தொடர்புகளைக் கொண்டிருக்கும். இந்நால்வகைத் தொடர்புகளைக் கண்டறிவதன் மூலம் சொற்களை ஒருபொருள் குறித்த பலசொல் (Synonym), ஒரு மாதிரியான பொருண்மையைக் கொண்ட பல சொல் (Identical Synonym), உள்ளடக்கு சொல் (Hypernym), உள்ளடங்கு சொல் (Hyponym), பல பொருள் குறித்த ஒரு சொல் (Polysemy), எதிர்ச்சொல் (Opposition) என்று பாகுபடுத்தியறியலாம்.



உறங்கு, துஞ்சு, தூங்கு என்பனவும், வளர், கண்வளர் என்பனவும், துயில், கண்துயில் என்பனவும் முறையே ஒரே மாதிரியான பொருளணுக்களைக் கொண்டிருப்பதால் அவற்றை ஒரு பொருள் குறித்த பலசொற்கள் எனலாம்.


உறங்கு, சயனி, கண் அயர், கண்வளர் ஆகியன ஒன்றுக்கொன்று ஒத்த பொருளணுக்களோடு வேறுபட்ட பொருளணுக்களையும் கொண்டிருப்பதால் அவற்றை ஒரே மாதிரியான பொருண்மையைக் கொண்ட சொற்கள் (Identical Synonym) என்று குறிப்பிடுவர். உறங்குதல் தொடர்பான வினைகள் விழி என்ற வினையோடு முரண்பாடான பொருளணுக்களைக் கொண்டிருப்பதால் அவற்றை எதிர்ச்சொல் (Opposites or Antonyms) என்று குறிப்பிடலாம். சயனி என்பது உறங்குதலை மட்டுமின்றி படுத்திருத்தலை மட்டும் குறிக்கலாம் என்பதால் அது பல பொருள் குறித்த ஒரு சொல் (Polysemy) ஆகின்றது. உறங்குதல் என்ற சொல் இவ்வகுப்பில் வரும் சொற்களைப் பொருளணுக்கள் அடிப்படையில் தனக்குள் உள்ளடக்குவதால் அது உள்ளடக்கு சொல் (Hypernym) ஆகின்றது. ஏனையவை உள்ளடங்கு சொற்களாகின்றன (Hyponym). இவ்வாறு சொற்பாகுபாட்டுக்குப் பொருளணுப் பகுப்பாய்வு பயன்படுகின்றது.

7. பகுப்பாய்வின் பயன்

தமிழில் விரிவான விவரங்களைக் கொண்ட சொற்களஞ்சியங்கள் (Thesaurus), சொல் வலை (Wordnet) போன்றவற்றை உருவாக்கவும், மொழியிலுள்ள சொற்களின் பொருண்மை குறித்தும் பயன்பாடு குறித்தும் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளவும், சொல் வேறுபாடுகளையும் சொல் தொடர்புகளையும் கண்டறியவும் இப்பகுப்பாய்வு பயனளிக்கும் எனலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p13.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License