இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

கலித்தொகையில் குறியீட்டு உத்தி

முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி

முன்னுரை

பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் தங்கள் உள்ளுணர்வுகளையும், கருத்துக்களையும் எல்லா இடங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படையாகக் கூற முடியாது. ஆகையால், பண்பாடு மிக்க மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் உடலசைவுகள், சைகைகள், ஒலிகள், முகக்குறிப்புகள், இசைக்குறிப்புகள், அடையாளங்கள், எழுத்துக்கள், ஓவியங்கள் மற்றும் குறியீட்டுச் சொற்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். இவ்வகையில் ஐம்புலன்களின் வழியாகவும், குறியீட்டுச் சொற்களின் வழியாகவும் தொடர்பு நிகழ்கின்ற விதம் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

குறியீடு

மனிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், ஏதாவது ஒன்றின் வாயிலாகத் தங்களது கருத்துக்களைப் பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர். அப்போதே குறியீடும் தோற்றம் பெற்றது. குழந்தை பிறந்தவுடன் அழுது, தனக்குப் பசிக்கின்றது என்ற குறியீட்டுப் பொருளைப் பிறருக்கு உணர்த்துகிறது. வளர்ந்து வயது முதிர்ந்து இறக்கும் தருணத்திலும் சைகைகள் மூலம் தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு மனித இனம் தோற்றம் பெற்றவுடனேயே குறியீடும் தோன்றிவிட்டது. உள்ளுணர்வுகளை நேரடியாகவும், உவமைகள், உருவகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்த முடியாத நிலையில் குறியீடு தேவைப்பட்டது. சில காட்சிகளைக் கண்முன் கொண்டு நிறுத்தி உணர்த்த முடியாதப் பொருட்களைக் கூட அவற்றோடு இணைத்து நுண்பொருட்களுக்கு ஒரு வடிவம் கொடுத்து வெளிப்படுத்திக் காட்டுவதற்குக் கையாளும் இலக்கிய உத்தியே குறியீடாகும். தொடர்ந்து கருத்துப் புலப்பாட்டு ஊடகமாக இன்று வரையிலும் இக்குறியீடுகள் திகழ்கின்றன.



குறியீட்டின் தேவை

ஒரு படைப்பாளன் தனது உள்ளத்து உணர்வுகளை உள்ளபடியே வெளிப்படுத்த இயலாதவாறு புறக்கூறுகள் தடையாகும் நிலையில், அவனுக்கு குறியீடுகள் பெரிதும் தேவைப்படுகின்றன. இக்குறியீடுகளின் அடிப்படை நோக்கங்களாக,

“மறைத்துக் கூறல், குறித்துக் காட்டல் என்னும் இவ்விரு கூறுகளும் மிகப் பழங்காலந்தொட்டே தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளில் இருந்து வந்துள்ளன” (தமிழ் நூல்களில் குறிப்புப் பொருள்)

என்று ம.ரா.போ. குருசாமி குறிப்பிடுகின்றார்.

குறியீடு ஒருவருடைய மனக்குறிப்பை ஓர் அறிகுறியாகவும், அடையாளக் குறியாகவும் வெளிப்பட்டுச் சமுதாயத்தில் கருத்துப் புலப்படுத்தம் செய்ய மக்களுக்குப் பெரிதும் தேவைப்படுகிறது. சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்காக மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு சிக்கன அலகு (Economic Unit) குறியீடாகும். அதாவது மொழியியல் குறி அந்தந்த மொழியினருக்கும், குழுஉக்குறி அந்தந்தக் குழுவினருக்கும் மட்டுமே விளங்க வைப்பதற்கும், மனிதனுக்குப் பெயரிட்டு அடையாளங் காணுதற்கும் கூடக் குறியீடு தேவைப்படுகிறது. சான்றாக,

“விளக்க முடியாத பொது உணர்வுகளையோ, கருத்துக்களையோ விளக்க அனைவருக்கும் எளிதில் புரியும் பொதுவான காட்சிப் படிமம் ஒன்றைக் குறியீடாகக் கவிஞன் கையாள்வானெனில் அதுவே பொதுக்குறியீடு என்றழைக்கப்படும்” (ஜஜி.ஜான்சாமுவேல், திறனாய்வு சிந்தனைகள் (ப.எ.145, 146))

என்றும்,

“படைப்பவனின் உள்ளத்தில் தோன்றுகின்ற தனிப்பட்ட உணர்வுகளையும் தனித்த சிந்தனைகளையும் வெளியிட பிறருக்கு எளிதில் விளங்காதக் காட்சிப் படிமங்களைக் குறியீடாக அமைப்பதைத் தனித்த குறியீடுகள் என்றழைக்கலாம்” (ஜஜி.ஜான்சாமுவேல், திறனாய்வு சிந்தனைகள் (ப.எ.146))

என்றும் ஜி.ஜான்சாமுவேல் குறிப்பிடுகின்ற கருத்து இங்கு சுட்டத்தக்கது. இவற்றையே மேல்நிலைப் பொருளுணர்தல், ஆழ்நிலைப் பொருளுணர்தல் என்று குறிப்பிடுகின்றோம்.



குறியீட்டு உத்தி

இலக்கியம், சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளிலும், நாடகம், திரைப்படம், விளம்பரம் போன்ற ஊடகக் கலைகளிலும், வழிபாடு, சடங்கு போன்ற மனிதச் சமுதாயத்தின் அன்றாட வாழ்வியற் கூறுகளின் பலநிலைகளிலும், பல இலக்கியப் பனுவல்கள் என்ற பல மொழித்தளங்களிலும் குறியீடு ஓர் பயன்பாட்டு உத்தியாகவே பயன்பட்டு வருகிறது. ஒரே பனுவலிலும் கூடப் பல நிலைகளிலும் குறியீட்டு உத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் நோக்கும் போது, குறியீடு என்பது காலம், இடம், மொழி, இனம், ஊடகம், வடிவம், வகை போன்ற எல்லா வரம்புகளையும் மீறிய வரம்பில்லா பயன்பாட்டு உத்தியாகவே திகழ்கின்றது என்று கூறலாம்.

இலக்கியங்களில் குறியீடு

சங்க இலக்கியங்கள் தொடங்கி, நவீன இலக்கியங்கள் வரையிலும் தமிழ் இலக்கிய மரபில் இடையீடுபடாத பயன்பாட்டுக்கு உரியதாகத் திகழும் வெளிப்பாட்டு உத்திகளுள் குறிப்பாலுணர்தலும் ஒன்றாகும். இலக்கிய மொழித்தளத்தில் குறிப்பாக அக இலக்கியங்களில் குறிப்புப் பொருளுணர்த்தும் வெளியீடாகவும், ஒரு பொருள் அல்லது ஒரு செயல் அல்லது ஒரு நிகழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தும் குறியீடாகவும், மேல்நிலைப் பொருளுணர்தல், ஆழ்நிலைப் பொருளுணர்தல் என்ற இரு நிலைகளிலும் குறியீட்டு உத்தி பயன்படுத்தப்படுகின்றது. அக இலக்கியங்களில் ஆழ்நிலையில் தலைவன் தலைவியர் கூடுதல் மற்றும் பொருளுணரச் செய்தலே குறியீட்டின் உயரிய நோக்கமாகும். அக இலக்கியங்களைப் பொருத்த வரையில் தனித்துவக் குறியீடுகளே மிகுதியாக இடம் பெறுகின்றன.

அகம் என்ற குறியீட்டின் முதற்பொருள் ‘உள்’ என்பதாகும். இரண்டாவது பொருள் ‘தலைவன் தலைவி இருவரின் அன்பு அடிப்படையிலான இன்பக் காதல்’ என்பதாகும். தமிழ் இலக்கியங்களில் பயிற்சி பெற்ற எவரும் ‘அகம்’ என்று கூறியவுடன் ‘உள்ளத்தில் நிகழ்வது’ என்று அது உணர்த்தும் குறிப்புப் பொருளை உணர்ந்து கொள்வதால் அது தனித்துவக் குறியீடாகும். அக வாழ்வு ‘களவு’, ‘கற்பு’ என்ற இரு பிரிவுகளை உடையது. இவை ‘களவொழுக்கம்’, ‘கற்பொழுக்கம்’ ஆகிய ஒழுக்கங்களுக்குப் பதிலியாக அமைவதால் அவையும் குறியீடுகளாயின. கற்பிற்கு களவே அடிப்படை என்பது வெளிப்படையான கருத்தாகும்.



கலித்தொகையில் குறியீடு

கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. இது பா வகையால் பெயர் பெற்ற நூலாகும். இவற்றில் பல பாடல்கள் ஓரங்க நாடகம் போல் அமைந்து குறியீட்டுப் பொருட்களை வெளிப்படுத்துகின்றது. ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் பழம் புலவர்களால் பாராட்டப்பட்ட இந்நூல் பல நிலைகளில் நின்று பல வகையான குறியீட்டுப் பொருட்களை வெளிப்படுத்துகின்றது. சான்றாக, ‘முல்லை’ என்ற சொல்லிற்கு ‘மலர்’ என்ற மேல்நிலைப் பொருளையும், ‘கற்பு’ என்ற ஆழ்நிலைப் பொருளையும் புலப்படுத்துகின்றது. மேலும், சொற் குறியீடு, சொல்லல்லாக் குறியீடு ஆகிய நிலைகளிலும் கருத்துப் புலப்பாடு நடைபெறுகின்றது.

இரவுக்குறி வந்து மீண்ட தலைவனுக்குத் திருமணத்தை விரைவுபடுத்த எண்ணிய தோழி, அருள் பெற்றவன் ஆக்கம் போல செல்வப் பொலிவு பெற்ற தலைவியின் அழகைப் புறங்கூறும் மக்களிடமிருந்து காப்பதற்குரியப் பொருள் உண்டெனில் கூறுவாயாக என்று குறியீட்டுப் பொருள் உணரும்படி வினவினாள் என்பதை,

“அறம் சாரான் மூப்பெ போல் அழிதக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம்; போல் திருத்தகும்; அத்திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்ததைக்
காண்”
(கலித்தொகை பா.எ.38)

என்ற கலித்தொகை பாடல் கூறுகின்றது.

தலைவி, தலைவன் தன்னை மணம் செய்யக் காலம் தாழ்த்துகின்றான் என்ற வருத்தத்தில், அவன் சிறைப்புறமாக நிற்க, தேனை உண்ட வண்டு மீண்டும் அம்மலரைத் தேடிச் செல்லாது. வேறொரு மலரை நாடிச் செல்லும் அவ்வண்டு போல என் நலம் நுகர்ந்து நான் வாடுமாறு செய்து விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் என்று குறியீட்டுச் சொல்லால் உணர்த்துவதை,

“பெண்டிர் நலம் வௌவி, தண்சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை”
(கலித்தொகை பா.எ.40)

என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது.

தலைவன் தலைவியர் தங்கள் உள்ளுணர்வுகளைக் கண், காது, மூக்கு, மெய், வாய் ஆகியவற்றின் வழி வெளிப்படுத்துகின்றனர். அதாவது கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் நுகர்ந்தும், உடம்பால் தொட்டும் என்று ஐம்புலன்களாலும் தொடர்புகள் நிகழ்கின்றன.

தலைவி தன் மன மகிழ்ச்சியால் தோன்றிய முறுவலை நாணம் தோன்ற, அடக்கிக் கொண்டு கண்களிலும், முகத்திலும் வெளிப்படுத்தினாள் என்பதை,

“ஔநுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்
முள்நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்”
(கலித்தொகை பா.எ.66)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.



தொடு உணர்வால் மெய் தீண்டப்படுவதால் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இவற்றினால் சில செய்திகள் பெறப்படுகின்றன. இம்மெய்யுணர்வு எல்லா உயிரினங்களுக்கும் உரியது. உள்ளத்து உணர்ச்சிகளை மற்றவர்களுக்குப் புலப்படும்படி உடலுறுப்புகளை அசைத்தல், சைகை காட்டுதல் முதலிவற்றால் உணர்வுக் குறிப்புகள் வெளிப்படும் என்பதற்குச் சான்றாகக் கலித்தொகையில்,

“ஓய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்;
மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன் ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென
ஒண்குழாய்! செல்க’ எனக்கூறி, விடும்பண் பின்
அங்கண் உடையன் அவன்”
(கலித்தொகை பா.எ.37)

என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ளன.

இன்பம் பெற எண்ணிய தலைவி கை நெகிழ்வது போல காட்டி, தலைவன் மார்பின் மேலே வீழ்ந்து கிடந்தாள். அவனும் உண்மை என்று நினைத்து எடுத்து அணைத்துக் கொண்டான். உண்மையறிந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைத்து செல்க! என்று தலைவன் கூறும் பண்பு, தலைவியிடம் அவனுக்கு விருப்பமுள்ளதைத் தெரிவிக்கின்றது.

முடிவுரை

பண்பாடுமிக்க பழந்தமிழர்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உடலசைவுகள், சைகைகள், குறியீட்டுச் சொற்கள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தித் தொடர்பு கொண்டனர். அவற்றை வருங்கால சந்ததியினருக்குப் புலப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கோடு பதிவு செய்து வைத்துள்ளனர். அவையே சங்க இலக்கியங்களாக மிளிர்கின்றன. இந்தச் சங்க இலக்கியங்களிலிருந்து சுட்டப்பட்டுள்ள மேற்கண்ட சான்றுகளிலிருந்து கண்ணையும் முகத்தையும் பார்த்துப் பெறப்படும் தொடர்புகள் உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும் என்பதையும், அவ்வகைக் குறியீட்டுத் தொடர்பு பெறுநரின் மனத்தில் ஆழப்பதிந்து செயல்படத் தூண்டும் என்பதையும் அறிய முடிகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p138.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License