இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

மதுரைக் காஞ்சி காட்டும் வைகை

முனைவர். ப. பாண்டியராஜா


மதுரைக் காஞ்சி என்ற பாடல் சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களில் ஆறாவதாக இடம் பெற்றிருக்கிறது. ஏனைய பாடல்களைக் காட்டிலும் மிக நீண்டதாக அமைந்திருக்கும் இப் பாடல், 782 அடிகளைக் கொண்டது. இப்பாடல் வஞ்சிப்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து வரும் அடிகளைக் கொண்டது. இது நிலையாமையை உணர்த்தும் காஞ்சித்திணைப் புறப்பாடலாகும். பாடலின் தலைவன் மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இப் பாடலைப் பாடியவர் மாங்குடி மருதனார். இவர் பாண்டிய மன்னன் அரசவையின் தலைமைப் புலவர். மதுரையை அடுத்துள்ள மாங்குளம் என்ற ஊரருகே உள்ள ஒரு குன்றின் பாறையில் உள்ள சமணர் படுக்கை அருகே நெடிஞ்சழியன் என்று எழுத்துப் பிழையுடன் பெயர் காணப்படுகிறது.


எனவே, இந்த மாங்குளம் தான் அன்றைக்கு மாங்குடியாக இருந்திருக்கலாம். இந்த மருதனாரின் வேண்டுகோளின்படி, நெடுஞ்செழியன் அங்கிருந்த சமண முனிவர்களுக்குக் கல்படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். இருப்பினும், இதற்கான வேறு சான்றுகள் இப்போதைக்கு இல்லை. இளமையிலேயே அரசாள வந்த இவனை வெல்ல, வேளிர் எனும் குறுநில மன்னர்கள் ஐவருடன், சேர, சோழரும் சேர்ந்து இவனுடன் போரிட்டனர். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த ஒரு மிகப் பெரிய போரில் இவன் அந்த எழுவரையும் தோற்கடித்தான். எனவேதான், இவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் எனப்பட்டான். அதன் பின்பு இவன் பேரரசனாகப் பெருவாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும். இருப்பினும், இந்த உலக வாழ்வு நிலையில்லாதது, எனவே நிலையான வாழ்விற்கான அறநெறியின்படியான நல்வாழ்வு வாழவேண்டும் என்று கூறுவதற்காக மருதனார் இப்பாடலைப் பாடுகின்றார்.



தம் நூலில் மருதனார் அன்றைய மதுரை நகரைப் பற்றிய பல செய்திகளை இனிமையுடன் விளக்குகிறார். இன்றைக்கும் மதுரைக்குச் சிறப்புச் சேர்ப்பன மதுரையின் நான்கு அடுக்கு தெருக்களே. மதுரையின் மையமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு பக்கங்களிலும் ஏறக்குறைய சதுரமாக அமைந்துள்ள வீதிகளைப் பற்றி அன்றே மருதனார் வெகு சிறப்பாக விளக்கியுள்ளார்.

சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் காலுற நிற்றர - மது 521,522

என்ற அடிகள் இதனை வலியுறுத்தும். நகரின் மையமாகப் பாண்டியன் அரண்மனை இருந்தது என்பதை நெடுநல்வாடை எடுத்துக் கூறும். எனவே, இன்றைய சுவாமி சன்னதியே அரண்மனை வளாகத்தின் நுழைவு வாயிலாக இருந்திருக்கவேண்டும். பாண்டியன் அகில் தெரு என்று இன்று அழைக்கப்படும் தெருவே அன்றைக்கு அகழிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். இந்தத் தெரு நான்கு பக்கங்களிலும் இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எனவே இதற்கு உட்பட்ட பகுதியே சங்க கால மதுரையாக இருக்க வேண்டும். மாசி வீதிகள் நாயக்கர் காலத்திலும் வெளிவீதிகள் ஆரம்பகால வெள்ளையர் காலத்திலும் உருவாக்கப்பட்டன. அன்றைய மதுரை நகரை ஓர் அழகிய குறும்படமாக நம் கண்முன் காட்டும் மருதனார், மதுரையை வளப்படுத்தும் வைகை ஆற்றை மிகச் சிறப்பாகவும், நுணுக்கமாகவும் வருணித்திருப்பதை எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.



குணகடற்கு இவர்தரும் குரூஉப் புனல்

1. குண கடல் கொண்டு குட கடல் முற்றி
2. இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
3. அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி
4. கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப
5. கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க
6. வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
7. சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
8. குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி
9. நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி
10. களிறு மாய்க்கும் கதிர் கழனி - மதுரைக் காஞ்சி 238 - 247

அடிநேர் உரை

1. கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து,
2. இரவென்றும் பகலென்றும் அறிந்துகொள்ள இடமின்றி
3. மேடு பள்ளங்கள் எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து
4. கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் விழுந்து ஒலிக்க
5. மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க
6. மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி
7. சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து
8. கீழ்க்கடலுக்குப் பரவிச் செல்லும் கலங்கல் நிறத்தையுடைய மழைநீர், முனைந்து
9. ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப
10. யானையை மறைக்கும் கதிர்களைக் கொண்ட வயல்களிலும்



இந்த அடிகளில் புலவர், பாண்டிய நாட்டின் மருதநில வளத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார். பெருமழை பெய்து, பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஆற்றை நிறைக்க, அந்த ஆறு குளங்களை நிறைக்க, குளங்கள் வயல்களை நிறைக்க, வயல்களின் நெற்கதிர்கள் யானையையே மறைக்கும் என்று பூரித்துப் போய்ப் புகழ்கிறார் புலவர். மதுரை என்றால் அது வைகை ஆற்றைத் தவிர வேறு எந்த ஆறாக இருக்க முடியும்? இன்று நாம் வங்கக்கடல் என்றழைக்கும் கடல்தான் இங்கு குணகடல் அல்லது கிழக்குக் கடல் என்னப்படுகிறது. குடகடல் என்பது மேற்குக் கடலாகிய அரபிக்கடல் ஆகும். சங்க காலத்தில் இன்றைய கேரள, கர்நாடக மாநிலங்களில் தனி அரசர்கள் இல்லை. அப்பகுதிகளும் தமிழக மன்னர்களின் ஆளுகைப் பகுதிகளாகவே இருந்தன. எனவே, தமிழ்நாட்டின் நான்கு எல்லைகளாக, வடவேங்கடம், தென்குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் என்றே கூறப்படும். தென்மேற்குப் பருவக்காற்று அரபிக்கடலின் நீரை முகந்துகொண்டு வந்து, கேரள கர்நாடக மாநிலங்களின் உயர்ந்த மலைகளைத் தாண்டி வர வலுவின்றி, அங்கேயே மழையைப் பொழிந்துவிட்டுச் செல்கின்றன. தமிழ்நாடு மழைமறைவுப் பகுதியாகப் போய்விட்டதால், தப்பித்தவறி வரும் தென்கிழக்குப் பருவமழையே நமக்குக் கிடைக்கும். அம்மாநிலங்களின் பல ஆறுகள் மேற்குக் கடலுக்குத்தான் செல்லும். தப்பிவரும் காவிரி ஆறுதான் சோழநாட்டை வளப்படுத்துகிறது. ஆனால், பாண்டிய நாட்டு வைகை ஆறு அப்படிப்பட்டதல்ல. வடகிழக்குப் பருவமழையால் வளம் பெறுவது இது. இப்பருவமழை வங்கக்கடலின் நீரை முகந்துகொண்டு வருகின்றது. அதனையே குணகடல் கொண்டு என்று புலவர் கூறுகிறார். இந்த மேகங்கள் மேற்குநோக்கிச் சென்று, மேற்கு மலைகளால் மறிக்கப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தாண்டி நெடிய நிலப்பரப்பு இல்லை.


எனவே தான் புலவர் குடகடல் முற்றி என்கிறார். இங்கே பெய்கின்ற மழையும், மேற்குச் சரிவில் ஓடி, மேலைக்கடலில்தான் விழவேண்டும். ஆனால், பாண்டியநாட்டைப் பொறுத்தவரையில், இவ்வாறு பெய்யும் மழைநீர் இயல்பாக மேற்கு நோக்கி ஓடாதவண்ணம், மழைப்பிடிப்புப் பகுதிகளின் (catchment areas) ஏற்ற இறக்கங்கள் நீரைக் கிழக்கு நோக்கித் திருப்பி அனுப்புகின்றன.

இதற்காக, முதலில் அங்குள்ள மேடுபள்ளங்கள் எல்லாம் நிறையவேண்டும்.

எனவேதான் புலவர், அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி என்கிறார். நிறைந்து, அவை கொள்ளாமல் கிழக்குப் பக்கமாகப் பொங்கிவரும் நீரே, பின்னர் வைகை ஆறாகப் பெருக்கெடுத்து வருகிறது. இதனையே புலவர்,

சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல்

என்கிறார்.

சரிவுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் ‘தடதட'வென்று ஓடி வரும். இவ்வாறு மறித்துத் திருப்பப்பட்டு வரும் நீர், மெல்லமெல்ல ஊர்ந்து வரும். இதனையே புலவர் இவர்தரும்... புனல் என்கிறார். இவருதல் என்றால் ஊர்ந்து, படர்ந்து வருதல் என்று பொருள். முதலை இரையைத் தேடி, தன் வளைந்த கால்களை வைத்துக் கொண்டு எவ்வாறு செல்லும்? அதுதான் இவர்தல்.

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலை - மலைபடுகடாம் 90

என்ற மலைபடுகடாம் அடியை நினைவுகூருங்கள்.

எனவே, இவர்தரும் புனல் என்ற இந்த அழகிய, பொருத்தமான சொல்லாட்சி எத்துணை ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது என்று எண்ணுந்தோறும் வியப்பாக இருக்கிறதல்லவா?


மழைநீர் ஆற்றில் பெருக்கெடுத்து வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? சேற்றிலும் சகதியிலும் புரண்டுகொண்டு வரும் முதல் வெள்ளம் அவற்றின் நிறத்தைப் பொறுத்துக் கறுப்பாகவோ, சிவப்பாகவோ கலங்கிய நீராகவே வரும். இதுவே இங்கு குரூஉப் புனல் எனப்படுகிறது. உந்தி என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். உந்து என்ற வினையின் எச்சமாக, உந்திக் கொண்டு வருகின்ற என்று கூறலாம். உந்துதல் என்றால் முன்னோக்கித் தள்ளுதல். வெள்ளம், தனக்கு முன்பாக இருக்கும் அனைத்தையும் முன்னோக்கித் தள்ளிக் கொண்டு வரும். உந்தி என்பதனைப் பெயர்ச் சொல்லாகக் கொண்டு, ஆற்றிடைக்குறை என்றும் கூறலாம். தமிழக ஆறுகளில் நீர் எப்போதும் நிறைய வருவதில்லை. அங்கங்கே ஆற்றின் பரப்பில் சிறுசிறு மணல்திட்டுகள் இருக்கும். இவைதான் ஆற்றிடைக்குறை. வெள்ளம் பெருகப்பெருக இந்தத் திட்டுகளுக்கு மேல் தண்ணீர் உயரத் தொடங்கும். பின்னர் இவற்றை முழுதும் மறைத்து அவற்றின் மேலாகப் பெருக்கெடுத்து ஓடும். இதையே புலவர் உந்தி நிவந்து செல் நீத்தம் என்கிறார் எனக் கொள்ளலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியின் ஒவ்வொரு சொல்லையும் பொருள் உணர்ந்து அழுத்தம் திருத்தமாகப் படித்து, அக் காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, சுவைத்துப் படியுங்கள். வைகையாறு தொடங்கும் இடத்திற்கே சென்று, அங்குள்ள காடு, மலைகளில் பெய்யும் பெருமழையை நேரில் கண்டு, தான் கண்டவற்றை அப்படியே உங்களுக்கு ஒரு குறும்படம் போலக் கண்முன் காட்டியும், ஒரு running commentary போல விளக்கியும், தேர்ந்தெடுத்த சொற்களால் புலவர் வருணிக்கும் திறத்தின் இனிமையைச் சுவைத்து இன்புறுங்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p51.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License