இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள்

முனைவர் க.துரையரசன்


முன்னுரை

இக்காலத்தில் நிர்வாகவியல் என்பது தனித்துறையாக நன்முறையில் வளர்ந்துள்ளது. சிறந்த நிர்வாகியும் சிறந்த நிர்வாகமும் அனைவராலும் போற்றத்தக்கன. நிர்வாகம் (அ) மேலாண்மைக்காக தனிப்படிப்புகளும் பயிற்சிகளும் சீரிய முறையில் இக்காலத்தில் கிடைக்கின்றன. ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்கிளலும் அதற்கு முன்பு தோன்றிய சிலப்பதிகாரத்திலும் இத்தகைய நிர்வாகவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளதை எடுத்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைகிறது.

புறநானூறு

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றை வரலாற்றுக் கருவூலம் என்பர் இலக்கிய வரலாற்றறிஞர்கள். இதன்கண் வரிவசூல், தலைமைப் பண்பு, பணிப்பகிர்வு, முதலாளி ஊழியர்களுடன் விருந்துண்ணல், இலாபப் பகிர்வு முதலான நிர்வாகவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.



வரிவசூல்

பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பியிடம் கூறியதாக அமைந்த கீழ்க்கண்ட பாடல் ஓர் அரசன் வரி வசூல் செய்வதற்குரிய சிறந்த ஆலோசனையை வழங்குவதாக உள்ளது. இவ்வகையில் இப்பாடலைச் சிறந்த நிர்வாகவியல் அணுகுமுறைப் பொதிந்த பாடலாகக் குறிப்பிடலாம்.

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே (1)

இப்பாடலில், ஓர் அரசன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் எனபது புலவர் பிசிராந்தையாரால் எடுத்துரைக்கப்படுகிறது. அத்தகைய அரசனால்தான் உலகும் உய்யும்; அவனும் உய்வடைய முடியும். அரசனுக்கு இருக்க வேண்டிய பல நிர்வாகத் திறன்களுள் வரி வசூலிப்பது என்பதும் ஒன்றாகும். அத்தகைய வரியை முறை தவறி வசூலித்தால் உலகும் கெடும்; தானும் கெடுவான் என்றும், முறைப்படி வரி வசூலித்தால் உலகும் மகிழும்; தானும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற நிர்வாக நுட்பத்தைப் புலவர் கற்றுத் தருகிறார். இன்றைக்கும் வரி வசூல் செய்வதில் அரசாங்கம் அனைவரும் ஏற்கத்தக்க நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அத்தகைய அரசைத்தான் பொதுமக்கள் நல்ல அரசு என்று பாராட்டுவார்கள். இவ்வரி வசூல் சோழர்களின் ஊராட்சி நிர்வாகத்தில் செம்மையாக இருந்ததையும் ஈண்டு நினைவுகூரல் தகும்.



நிறுவனத் தலைவர்

ஒரு நிறுனத்தின் தலைவர் அந்நிறுவன ஊழியர்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்க வேண்டும். அப்பொழுதுதான் ஊழியர்கள் அவர்களைப் போல் நடந்து கொள்வார்கள். ஓர் ஊழியரைக் காலதாமதமாக வரக் கூடாது என்று கூறுகின்ற நிறுவனத் தலைவர், முதலில் அதை அவர் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறரும் அதனைப் பின்பற்றுவர். அதனை விடுத்துத் தான் காலதாமதமாக வந்து கொண்டு ஊழியர்களைக் காலதாமதமாக வரக்கூடாது என்று கண்டிப்பதில் பயன் ஏதும் விளையாது. இதைப் புறநானூற்றுப் பாடல்,

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே (2)

என்று குறிப்பிடுகிறது. அதாவது மன்னனைப் பொறுத்தே மக்களும் அமைவர் என்பதாம். இதையே அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற தொடரும் வற்புறுத்துகிறது. அதைப்போலவே ஒரு நிறுவனத்தின் இயக்குநர் (அ) தலைவரைப் பொறுத்தே அந்நிறுவனத்தின் வளர்ச்சியும் அமையும். எனவே தலைமை நிர்வாகிக்குரிய சிறந்த நிர்வாகத் திறனை இஃது எடுத்துரைப்பதாகக் கருதலாம்.



பணிப்பகிர்வு (அ) கடமைகள்

ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு உரிய பணிகளைப் பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். அதுதான் நன்முறையில் வேலை நடைபெறுவதற்குரிய வழியாகும். இதை இக்காலத்தில் பல நிறுவனங்கள் செயல் திட்டம் (Project) என்ற பெயரில் ஒரு குறிப்பிட்டவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட குழுவினருக்கோ பணிகளை ஒதுக்கிக் கால வரையறையும் செய்து விடுகின்றனர். இத்தகைய சிறந்த நிர்வாக அணுகுமுறையை,

ஈன்று புறந்துருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (3)

என்று புறநானூறு குறிப்பிடுகிறது.


பெருஞ்சோற்று நிலை

பெருஞ்சோற்று நிலை என்பதை, அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு என்று தமிழ்-தமிழ் அகரமுதலி குறிப்பிடுகிறது. இதனைத் தொல்காப்பியர் பிண்டமேய பெருஞ்சோற்றுநிலை என்று குறிப்பிட்டுள்ளார். (4)

பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா போன்ற சிறப்பு நாட்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைத்து மகிழ்ச்சியாய் இருப்பதை இன்று பெரு வழக்காகக் காண முடிகிறது. அது போலவே சங்க காலத்திலும் ஓர் அரசன் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் அவ்வெற்றிக்குப் பாடுபட்ட வீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையிலும் பெருஞ்சோறு வழங்கும் விழாவைக் கொண்டாடியுள்ளான்.

இவ்விழாவில் போரில் ஈடுபட்ட வீரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்குக் கள்ளும் இறைச்சியும் கலந்த உணவைத் தயார் செய்து விருந்துக்கு ஏற்பாடு செய்வான். அவ்விருந்தில் வீரர்களோடு அவ்வரசனும் சரிசமமாக அமர்ந்து உணவு உண்பான். இது வீரர்களுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அரசன்பால் மேலும் பற்றையும் ஏற்படுத்தும். இஃது ஒரு சிறந்த நிர்வாகப்பண்பு ஆகும்.

இக்காலத்திலும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மேற்குறிப்பிட்டதைப் போல தனது பிறந்த நாள் விழா (அ) திருமண நாள் விழா (அ) நிறுவன நாள் விழா (அ) தீபாவளி (அ) பொங்கல் (அ) கிறிஸ்துமஸ் (அ) புத்தாண்டு தினம் போன்ற ஏதாவது ஒரு நாளில் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவது (அ) விருந்துக்கு ஏற்பாடு செய்வது போன்ற நிகழ்வுகளைக் காண முடிகிறது.

இத்தகைய நிகழ்வுகள் ஊழியர்களுக்கும் உரிமையாளருக்குமிடையே ஒரு நெருக்கமான பிணிப்பை ஏற்படுத்தும் என்பதை நிர்வாக உத்தியாக இன்று குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிர்வாக உத்தி புறநானூற்றின் கீழ்க்கண்ட பாடலில் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை போல
...................................................
ஈர்ஐம்பதின்மரும் பொருது களத்தொழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (5).


இலாபப் பகிர்வு

பெரும்பாலான அரசு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி தங்களின் ஊழியர்களுக்குத் தீபாவளி (அ) பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தங்களின் இலாபத்தில் ஒரு சிறு பகுதியை ஊழியர்களுக்கு ‘மீதூதியம்’ (Bonus) என்ற பெயரில் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அதாவது வருகின்ற இலாபத்தில் ஊழியர்களுக்கும் பங்கு என்பது, தாங்கள் பணியாற்றுகின்ற நிறுவனம் தங்களது நிறுவனம் என்னும் பிடிப்பை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது. மேலும் இலாபம் அதிகரிக்க அதிகரிக்கத் தங்களின் ‘மீதூதியம்’ அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவர் என்பது நிர்வாகவியல் அணுகுமுறையாகும்.

இத்தகையப் போக்குப் புறநானூற்றில் காணப்படுகிறது. மேலே கூறிய பெருஞ்சோற்று நிலையையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதன் வளர்ச்சி நிலையாகப் போரில் பகை அரசனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொன், பொருள் முதலியவற்றை வெற்றி பெற்ற அரசன் தன் வீரர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்பப் (வரிசையறிந்து) பகிர்ந்தளிப்பான் என்ற செய்தியைப் புறநானூற்றில் பல இடங்களில் காண முடிகிறது.

இதனைத் தொல்காப்பியர் வெட்சித்திணையின் 12வது துறையாகப் பாதீடு என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளார். பாதீடு என்றால் பங்கிடுகை, பங்கீடு என்று அகராதிகள் பொருள் தருகின்றன. கவர்ந்த பசுக்களை வீரர்கள் மற்றும் படை தொடர்பானவர்களுக்குப் பகிர்ந்தளித்தல் என்பதே இதன் பொருளாகும். இதனைத் தொல்காப்பியர் தந்துநிறை, பாதீடு, கொடை என்ற துறைகளாகக் குறிப்பிட்டுள்ளார். (6)

சிலப்பதிகாரம்

இத்தகைய நிர்வாகவியல் தொடர்புடைய சிந்தனைகள் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு செய்திகள் கீழே விளக்கப்படுகின்றன.

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாக இவன் கருதப்படுகின்றான். இவன் தன் நாட்டு மக்களைக் கண்ணும் கருத்துமாகக் காத்து ஆட்சி செய்து வந்தான். தன் குடிமக்கள் அச்சமற்ற வகையிலும் பாதுகாப்பான முறையிலும் வாழ்வதற்கு உரிய முறைமைகளைச் செய்திருந்தான். சில நேரங்களில் அதனைத் தானே நேரடியாக ஆய்வு செய்து நிறைகுறைகளை நிவர்த்தி செய்து வந்தான்.


அவ்வகையில் ஒரு நாள் இரவு தன் நகரை வலம் வந்து இரவுப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தான். ஒரு வீட்டில் பேச்சுக் குரல் கேட்டது. இதனால் ஐயமுற்ற அரசன் அவ்வீட்டின் கதவைத் தட்டினான். அப்பேச்சுக் குரல், வெளியூர் சென்றிருந்த ஒருவன் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தது என்பதை அறிந்தான். அவ்வீட்டின் கதவை மட்டும் தட்டினால் அவள் மீது கணவன் ஐயம் கொள்ளக் கூடும் என்று அஞ்சிய அவ்வரசன் அவ்வீதியிலிருந்த அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டினான். மறுநாள் அரசனிடம், நேற்று இரவு யாரோ ஒரு திருடன் நம் நகரின் அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டியுள்ளான் என்று அனைவரும் புகார் கூறினர். உடனே அரசன் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று ஆலோசனை வழங்குமாறு கேட்க, அனைவரும் அவனது கையை வெட்ட வேண்டும் என்று கூறினர். உடனே அரசன் தன் கையை வெட்டிக் கொண்டான். வெட்டுப்பட்ட அக்கையைப் பொன்னால் செய்து அவன் பொருத்திக் கொண்டமையால் பொற்கைப் பாண்டியன் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.

குடிமக்களைப் பாதுகாத்தல், தவறு செய்கின்றவன் யாராக இருந்தாலும் - நாட்டை ஆளும் அரசனாகவே இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்னும் சிறந்த நிர்வாக முறையை எடுத்துரைப்பதாக இச் செய்தி அமைந்துள்ளது.(7)

தீர ஆய்தல்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.(8)

என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப ஓர் அரசன் எதனையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். இம்முறைமையை மீறினால் அரசனே ஆனாலும் அழிந்து விடுவான் என்பதை சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியன் வரலாறு காட்டுகிறது. எனவே இவ்விடத்தில் சிலப்பதிகாரம் மன்னனுக்குரிய தீர ஆய்தல் என்ற நிர்வாகத்திறனை வற்புறுத்துகிறது. இத்திறனற்ற அவ்வரசன் அழிவதையும் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது. (9)

முடிவுரை

மேற்கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்கும்பொழுது, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இக்கால நிர்வாகவியல் அணுகுமுறைகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இக்காலத்தில் தனித்துறையாக வளர்ச்சிப் பெற்றுள்ள நிர்வாகவியல் (அ) மேலாண்மையியல் துறைசார்ந்த சொல்லாட்சிகள் வேண்டுமானால் இந்நூல்களில் இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், இத்தகு கருத்தோட்டங்கள், சிந்தனையாக்கங்கள் இந்நூல்களில் இருக்கின்றன என்பதை இக்கடுரையின் வழி அறியலாம். இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யுமிடத்து விரிவான, ஆழமான நிர்வாகவியல் செய்திகள் கிட்டும் என்று உறுதிபடக் கூறலாம்.

அடிக்குறிப்புகள்

1. பாண்டியன் அறிவுடைநம்பியை இடித்துரைக்குமாறு பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 184.
2. மோசிகீரனார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 186.
3. பொன்முடியார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 312.
4. தொல்காப்பியப் புறத்திணையியல், நூ.7.
5. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 2.
6. தொல்காப்பியப் புறத்திணையியல், நூ.3.
7. சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
8. திருக்குறள், 423.
9. காண்க: சிலப்பதிகாரம் வழக்குரை காதை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p64.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License