இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிகள்

எஸ். சசிகலா

முன்னுரை

கற்கால மனிதன் கல்லைத்தான் மண்ணைத்தான் கண்டறிந்தான். அவன் தன் மனதில் உள்ள கருத்தினை வெளிப்படுத்த பல வகை ஒலிகளை உருவாக்கினான். காலப்போக்கில் அதுவே அவன் பேசும் மொழியாக மாறிவிட்டது. ஆம் ! கற்கால மனிதன் முதன் முதலில் பேசியது ஒலிகள் மூலம்தான். ஒலி தான் அவன் தாய்மொழி. பின்பு விலங்குகளை வேட்டையாடவும், சின்னஞ்சிறு பறவைகளை ஓட்டவும் ஒலிகளைப் பயன்படுத்தினான். இவ்வாறாக சங்க கால இலக்கிய மாந்தர்கள் ஒலியின் மூலம் தான் இசை பிறந்தது என்பர். அவ்வகையில் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிகள் எவ்விதம் வெளிப்படுகிறது என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

எட்டுத் தொகையில் ஒலிகள்

“ நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுபத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம் புறமென்று
இத்திறத்து எட்டுத்தொகை”.

என்னும் வெண்பாவின் வழி எட்டுத்தொகையில் எழும் பல்வேறு ஒலிகளை இங்கு காண்போம்.

நற்றிணையில் தவளை ஒலிகள்

நற்றிணையில் தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றவன் வினை முடிந்து தலைவியைக் காணும் பொருட்டு தன் தேரினை விரைவாக ஓட்டினான். அதனை ஆசிரியர் தம் பாடலில் கூறும் போது,

“புது நீர் அவல …………
நா நவில் பல்கிளை கறங்க, மாண் விளை
மணி ஒலி கேளாள், வாணுதல்”. (பக் - 73, பா - 42)

புதிய நீர் நிரம்பிய பள்ளங்கள் தோறும் நாவினால் ஒலி செய்யும் கூட்டத்தையுடைய தவளைகள் ஒலி செய்வதால், நாம் சென்ற தேரில் கட்டிய நாவினையுடைய மணிகளின் ஒலியை, ஒளி பொருந்திய நெற்றியையுடைய நம் தலைவி கேட்கவில்லை. ஆகவே நீவீர் விரைந்து செல்க என்று தலைவன் கூறினான். தலைவனின் ஊரானது நீர் வளம் மிக்க நாடு என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.

குறுந்தொகையில் பல்லியின் ஒலி

ஆண் பல்லியின் ஒலி கேட்டுத் தலைவன் நம்மை நினைப்பாரோ? இல்லையோ? என்று பிரிவால் வாடும் தலைவியின் நிலையினை கூறுகின்றார்.

“உகிர்நுதி புரட்டும் ஓசை போல
செங்காற்பல்லி தன் துணை பயிரும்
அங்காற் கள்ளி அம் காடு இறந்தோரே ? (பக் - 53, பா - 16)

அம்புகளின் கூர்மையை அறிய நகத்தால் அவற்றின் நுனியை நெருடுவர். அவ்வோசையைப் போல, செவ்விய கால்களையுடைய ஆண்பல்லி, தனக்குத் துணையாகிய பெண் பல்லியை அழைக்கும் ஒலி விளங்கும். இத்தகைய பல்லிகள் தங்கியுள்ள கள்ளிச் செடிகள் மிகுந்த காட்டிடையே காதலர் நம்மை நினையாரோ? என்று புலம்பும் தலைவியின் நிலையினை பல்லியின் ஒலி மூலம் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.

பதிற்றுப் பத்தில் தாளிக்கும் ஒலி

நம் பதிற்றுப் பத்துத் தலைவி சமையற் கலையில் சிறந்து விளங்கியவர். அவள் சமைக்கும் போது தோன்றும் நறுமணம் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. அதனை ஆசிரியர் தம் பாடல் வரிகளில் கூறும் போது,

“குய் இடு தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு …………
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி” ……… (பக் - 50, பா - 21)

தம் இல்லத்திலேயே உண்ணும் பொருட்டும் ஆட்டு வாணிகர் இறைச்சியைக் கட்டையின் மீது வைத்துக் கொத்திய வெள்ளிய நிணத்தோடுங் கூடிய வளவிய இறைச்சியைத் தாளிதம் செய்யும் தோறும் எழும் ஓசையானது கடலோசை போல அடங்காது ஒலிக்கிறது. இவ்வாறு செல்வ வளம் மிக்க வீட்டின் கண்ணே சமைத்தலால் புகை எழச் சமைக்கும் உணவின் கண்ணே இடுகின்ற நெய்யாகிய ஆவுதியின் புகை என்று சமையற் கலையினை சிறப்பு செய்கின்றார்.

கடலொளி போல துயிலாமை

தலைவனுக்கு உறக்கம் என்பதே இல்லை என்று கூறித் தன் மனக்குமுறலைத் தம் பாடல் வரிகளில் கூறியுள்ளார். ஐங்குறுநூறு ஆசிரியர்

“உரவுக் கடல் ஒலித் திரைபோல
இரவினானும் துயில் அறியேனே !” (பக் - 359, பா - 172)

ஒளி பொருந்திய வளையணிந்து நங்கை என் நெஞ்சைக் கவா;ந்த கொண்டனள். வண்டுகள் ஒலித்தற்கு இடமான குளிர்ந்த துறைகளையுடைய தொண்டியின் கண் பரந்துபட்ட கடலின் ஒலி மிக்க திரைகள் போல, யான் இரவுப் பொழுதிலும் உறங்குதலை அறியேன் என்று தன் தணிமைத் துயரைக் கூறியுள்ளார்.

துன்பம் சேர்க்கும் இயற்கை ஒலி

கலித்தொகையின் தலைவிக்கு இயற்கையில் எழுகின்ற ஒலிகள் அனைத்தும் துன்பம் விளைவிப்பதாக அமைகின்றன என்று கூறியுள்ளார். அவை பின்வருமாறு,

‘நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கும் இசை மிஞிறொரு தும்பிதாது ஊத
தூது அவர் விடுத்தார் துறப்பார் கொல் ? நோதக
இருங்குயில் ஆலும் அரோ” (பக் - 121, பா - 33)

யாழின் இனிய இசையை அங்கங்கே நிறுத்திச் சுவை சேர்க்கும் குழலின் இன்னோசை, அது போல வண்டுகளின் ஒலியோடு இணைந்து, தும்பிகளும் தாது ஊதிப் பாடுகின்றன. நம்மை மேலும் நோவு செய்வன போலக் கருங்குயில்களும் கூவுகின்றன என்று தலைவியும் தன் அவல நிலையினை அறிய முடிகின்றது.

பரிபாடலில் முழங்கும் முரசம் ஒலி

திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் முரசமானது முழங்கும் ஒலியினைக் கடல் அலைக்கும், இடிக்கும் ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார் ஆசிரியர்

“மால் கடல் குடிக்கும் மழைக் குரலென
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென” (பக் - 201, பா - 8)

கிரௌஞ்சம் என்னும் மலையினை உடைத்த ஒளிமிக்க வேற்படையினை ஏந்திய முருகப் பெருமானே ! மதுரை மாநகரில் மணம் பொருந்திய மணி போன்ற நிறமுடைய முரசத்தின் முழக்கம் எழுந்தது. காற்றினால் மோதி அடிக்கப்பட்ட கடல் அலைகள் கரைக்குப் பெயர்ந்து வந்து ஒலிப்பது போலவும், அக்கடல் நீரைக் குடிக்கும் மேகத்தின் முழக்கத்தைப் போலவும், இந்திரனுடைய இடியேறு முழக்கம் பெரிய இடியின் ஒலி போலவும், அம் மண முரசம் ஒவ்வொரு முறை முழங்குந்தோறும் அம்முழக்கம் உன்னுடைய திருப்பரங்குன்றத்தில் முழங்கிய முழக்கத்திற்கு மாறுமாறாக ஒலிக்கும் என்று கூறுகின்றார் பரிபாடல் ஆசிரியர்.

தண்ணுமைக்கு பயந்த நாரை

பறையோசைக்குப் பயந்து நாரை தம்இடம் பெயர்ந்து பனைமரத்தில் தஞ்சம் புகுமாம்! அப்படிப்பட்ட வயல்கள் நிறைந்த ஊர் என்று கூறுகின்றார். அதனை,

“வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரிய தடதாள் நாரை(ந்)
செறி மடை வயரின் பிளிற்றி”. (பக் - 120, பா - 40)

வயல்களில் வெண்ணெல்லை அரிவார் பின் புறத்தே ஒலிக்கும் பறையோசைக்கு வெருவிய, நீண்ட கால்களையுடைய நாரை செறிந்த மூட்டுவாயையுடைய கொம்பு போல் ஒலித்துப் பனைமரத்தின் ஆக மடலிலே தங்கும். அது போல தானும் தன் தலைவன் மார்பினைத் துயிலும் இடமாகக் கொள்ள வேண்டும் என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

குரவைக் கூத்தின் ஒலி

அகத்தில் தலைவன் மார்பினைத் தஞ்சம் புக நினைத்தவளை, புறத்தில் உண்டாகும் ஒலியானது வீரமிக்க ஆண்மகன் ஆடும் குரவை கூத்தினை பற்றியதாகும். இது,

“கலிச் சும்மை வியல் ஆங்கண்
பொலந் தோட்டுப் பைந் தும்மை
……………….
சின மாந்தர் வெறிக் குரவை” (பக் - 62, பா - 22)

நெல் குற்றுவதால் அடங்காத உலக்கையின் பேரொலியுடன் மிக்க ஆரவாரத்தையும் உடைய அகலிடம் அவ்விடத்தில் பொன்னால் செய்த இதழையுடைய பசிய தும்மையுடன் மேலே, அசையும் உச்சியையுடைய பனந்தோட்டையும் செருகியவராய்ச் சினமுடைய வீரர் விளங்குவர். அவர்களாடும் வெறியாடுதலாகிய குரவைக் கூத்தின் ஒலி, கடலொலி போல எழுந்து ஒலிக்கும். இத்தகைய படைவீரர் மிகுதியினால் இடமின்றிப் பரந்து அகன்ற பாசறையில் தங்கிய காவலனே ! என்று எட்டுத் தொகையில் எழும் ஒலியானது ஒவ்வொரு ஒலிக்கும் மாறுபட்டு அவை ஒலிக்கும் இடத்திற்கு ஏற்ப ஒலித்து ஒலியின் தன்மையினை வெளிப்படுத்துகின்றது.

பத்துப்பாட்டில் ஒலிகள்

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள முதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”

என்னும் பழஞ்செய்யுள் ஒன்று. பத்துப்பாட்டு நூல்கள் இன்னின்னவை என்பதைத் தெரிவிக்கின்றது. இப்பத்துப் பாட்டில் உண்டாகும் ஒலிகளை காண்போம்.

திருமுருகாற்றுப்படையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானைச் சூரர் மகளிர் வணங்கும் முறையானது,

“சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆகும் சோலை”. (பக் - 6, பா - திரு.மு.படை)

அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத் தூக்கிய ‘கோழிக் கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும் ஒன்றாகக் கூடி மலையிடமெல்லாம் எதிரொலிக்க ஆடிப்பாடினர். இங்ஙனம் சூரர மகளிர் ஆடிப்பாடிக் கூடி மகிழும் சோலையை உடையது திருப்பரங்குன்றம் என்று முருகப் பெருமானைச் சிறப்பித்துக் கூறுகின்றார் நக்கீரர்.

திரு ஆவினன் குடியில் யாழிசை

பாடும் மகளிரின் இயல்பு பற்றி திரு ஆவினன் குடி பாடலின் வழி காணும் போது,

‘நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர், இன் நரம்பு உளர” (பக் - 11, பா - திருஆவிணன்குடி)

எஃகுச் செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வாரிக் கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று நன்மையுடைத்தாகிய மனம் கொண்டவர், எக்காலமும் இனிய மென் மொழியே பேசும் இயல்பினர் ஆகிய கந்தருவர்கள் இனிய யாழ் நரம்பினை இயக்கினர் என்று கூறுகின்றனர்.

அந்தணர் வழிபடும் முறை

திரு ஏரகத்தில் வீற்றிருக்கும் இறைவனை வேத மந்திரம் முழங்க முருகப் பெருமானின் மூலப் பெயராகிய ‘சரவணபவ’ என்னும் ஆறு எழுத்து மந்திரத்தினை வாசமிக்க மலர்தூவி வழிபட்டனர்.

‘ஆறு எழுத்து அடங்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி” (பக் - 13, பா - திருஏரகம்)

ஆறு எழுத்துக்களைத் தன்னிடத்துக் கொண்ட, பெறுதற்கு அருமையான ‘சரவணபவ’ என்னும் வேத மந்திரத்தை நாக்கு மட்டும் அசையும் அளவில் பயிலும் படி பல முறை ஒலித்துப் பின்னர் வாசமிக்க மலர்களை எடுத்திட்டு வழிபட்டனர்.

குறிஞ்சிப்பண் பாடி முருகனை வணங்குதல்

பழமுதிர்ச்சோலையிலே வீற்றிருக்கும் பிணி முகம் கொண்ட இறைவனை மக்கள் வழிபடும் விதமானது,

‘நறும்புகை எடுத்து, குறிஞ்சிப்பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க” (பக் - 15, பா - பழமுதிர்ச்சோலை)

நறிய மணப்பொருளைப் புகைத்து, அந்நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப்பாடி. முழங்குகின்ற அருவியின் ஓசையுடன் பல இசைக் கருவிகளும் முழங்க, பலவிதப் பூக்களைத் தூவி இறைவனை வழிபட்டனர்.

பாலையாழின் அமைப்பு

பாலையாழினைப் பாடினி இசைக்க வல்லவள் அப்பாலையாழைப் பற்றிக் கூறுமிடத்து,

‘குளப்பு வழி அன்ன கவடுபடுத்தல்
விளங்கு அழல் உருவின் விசி உறு பச்சை” (பக் - 80, பா - பொருணாற்றுப்படை)

யாழின் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஓர் அழகான உவமையைக் கூறுகிறார். ஆசிரியர் யாழின் பந்தலுக்க மான் குளம்பு, விளக்கின் சுடர் தோலின் நிறத்துக்கு உவமை. நண்டின் கண்கள் பந்தரின் வறிய வாய்க்கு எண்ணாள் திங்கள் உவமை நன்று குத்தப்பட்ட திணை அரிசி நரம்பிற்கு உவமை என்று பாலையாழின் தோற்றத்திற்கும் உவமை கூறியுள்ளார்.

சீறியாழின் சிறப்பு

சிறுபாணாற்றுப் படையில் சீறியாழை மீட்டு பாடும் விறலியரின் இயல்பினைத் தம் வரிகள் மூலம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர் இதனை,

‘இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ,
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க” (பக் - 138, பா - சிறுபாணாற்றுப்படை)

பொற்கம்பியினையொத்த முருக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடையது சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி. நட்டபாடை என்னும் பண்ணைப் பாலை யாழில், வாசித்தலில் வல்ல பாணன், முறைமையறிந்து வாசிக்க. வாரி வழங்கும் வள்ளியோரை நாடி வந்தமை என்று பாண்மகள் தம் வறுமையினை கூறுகின்றாள்.

யாழும் - குறிஞ்சிப் பண்ணும்

முல்லை நிலத்தின் அழகினை வருணிக்கும் போது கோவலர்கள் தங்கள் குழலில் இன்னிசைப் பாடியும். குறிஞ்சிப் பண் பாடியும் மகிந்திருந்தனர். பெரும்பாணாற்றுப்படையில் இதனை விளக்கும் பாடல் வரியானது,

‘செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனையின், குமிழின்
…………………
வில்யாழ் இசைக்கும். விரல் எறி. குறிஞ்சி” (பக் - 211, பா - பெரும்பாணாற்றுப்படை)

மூங்கில் குழலில் துளையை உண்டாக்கி அப்புல்லாங்குழலை ஊதி இனிய ஓசையை எழுப்புகின்றான். பாலைப் பண்ணில் இன்னிசை பாடிப்பாடி அலுத்த பொழுது அதை விடுத்து, குமிழங்கோட்டை வளைத்துக் கட்டி மரல் கயிற்றை நரம்பாகக் கொண்டு யாழை உருவாக்கி அந்த யாழிலே குறிஞ்சிப் பண்ணை விரலால் தெளித்து எழுப்புகின்றான். அந்த இசையைக் கேட்ட வண்டுகள், அதனைத் தம் சுற்றத்தின் ஒலியாகக் கருதிச் செவி கொடுத்துக் கேட்கும் புல் நிறைந்த அகன்ற முல்லை நிலம் ஆகும்.

தலைவன் வரும் தேரின் ஒலி

பாசறைக்கும் சென்ற தலைவன் வினை மீண்டு வருவான் என்ற எண்ணியிருந்த தலைவியின் கனவு நனவானது அதன் பொருட்டு தலைவன் வரும் தேரின் ஒலியானது, அவனின் காதுகளுக்கு இன்பம் சேர்ப்பதாக அமைகின்றது.

“இன்பல் இமிழ்இசை ஓரிப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின.” (பக் - 329, பா - முல்லைப்பாட்டு)

அம்பு தைத்த மயில் போல நடுங்கி நிற்கின்றாள். மழை நீர் கூரை கூடும் இடங்களினின்று உள் முற்றத்தே அருவி போல் சொரிய, அதனால் உண்டாகிய பல்வேறு இன்னிசை முழக்கத்தைக் கேட்டவாறே நெஞ்சம் ஆற்றி நின்ற தலைவியின் காதுகள் நிரம்பும் படியாகத் தலைவன் வரும் ஆரவார ஓசை எழுந்தது.

மதுரைக் காஞ்சியில் குரவை ஒலிகள்

“பாடு சிலம்பு இசை, ஏற்றத்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப” (பக் - 4, பா - மதுரைக்காஞ்சி)

தொழுவர் சிலம்பும் இசை, ஆம்பியின் இசை, கிழார் இசை. அதரி கொள்வர் இசை. முணி இசை, புள் ஒப்பும் இசை ஆகியவை பரதவ மகளிர் குரவையொடு கலந்து ஒலித்தன.

நெடுநல் வாடையில் அரண்மனையில் எழும் ஒலிகள்

“கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
ஒலி நெடும் பீலி ஓல்க” (பக் - 180, பா - நெடுநல்வாடை)

தனிமைத்துயரைத் தோற்றுவிக்கும் குதிரையின் ஒலியும், கிம்புரிப் பகுவாய் வழியாக வெளிப்படும் நீரின் ஒலியும், மயில்கள் தம் இனத்தை அழைக்கும் ஒலியும் இணைந்து மலைப்பகுதியில் தோன்றும் ஒலிகளைப் போல அமையும். இவ்வொலிகள் பக்க மலைகளில் பட்டு எதிரொலிக்கும் என்றும் கொள்ளலாம். இவ்வாறு அரண்மனையில் உண்டாகும் ஒலிப்பற்றி கூறியுள்ளார் ஆசிரியர்.

குறிஞ்சிப் பாட்டில் கீழ்க்கை ஒலி

கானவன் கள்ளுண்ட மகிழ்ச்சியால் தன் காவல் தொழிலை மறந்தனன். அவ்வமையம் வேழம் கதிர்களைத் தின்று தீர்த்து வருவதைக் கண்டு, கானவன் தன்னுடைய உடல் வலியாலும் கோபத்தால் பிறந்த சினத்தாலும் மயங்கி அம்பை எய்தனன். தட்டையைப் புடைத்தனன். காடெல்லாம் கல் என்னும் ஓசையுண்டாகுமாறு வாயை மடித்து விடுகின்ற சீழ்க்கை ஒலியராய்க் கானவர் மிக்க ஓசையை உண்டாக்கி அக்களிற்றைத் தினைப் புன்னத்தினின்றும் ஓட்டினர். அதனைப் பின்வரும் பாடல்வரி புலப்படுத்தும்.

“உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப.” (பக் - 232, பா - குறிஞ்சிப்பாட்டு)

பட்டினப்பாலையில் பல வகை

“குழல் அகவ. யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப
விழவு அறா, வியல் ஆவணத்து” (பக் - 308, பா - பட்டினப்பாலை)

மகளிரின் பாடலுக்கு ஏற்பத் துளைக் கருவியாகிய குழல், இசையை உண்டாக்கவும். நரம்புக் கருவியாகிய யாழ், முரலவும். தோல் கருவிகளாகிய முழவு முழங்கவும், முரசு ஒலிக்கவும் விழாக்கள் நீங்காமல் என்றும் நடைபெறும் அகன்ற ஆவண வீதிகளைக் கொண்டது புகார் நகரமாகும்.

மலைபடுகடாமில் உண்டாகும் பலவகை ஒலிகள் கேட்டல்

1. தன் கணவன் மார்பில் புலி பாய்ந்தமையால் பட்ட நெடிய, பிளந்து காணப்பட்டும் கீரிய புண்ணை ஆற்றுவதற்கும் காவலெனக் கருகி, அறல் போன்ற கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாட்டால் எழும் ஓசையும்.

2. ஒலிக்கும் மூங்கிலால் செய்த தட்டையைப் புடைத்துப் புனங்கள் தோறும், கிளிகளை ஓட்டும் மகளிர் கூப்பிடுதலால் பிறந்த ஆரவாரம்.

3. மேகத்தைக் கண்டாலொத்த கொட்டில்கள் தோறும் விரைவாக கரும்பின் கோலைச் சாறு கொள்ளும் சாலையின் ஓசையும்.

‘ஒலி கழைந் தட்டை புடைநர், புனந்தொரும்
கிளி கூடி மகளிர் விளிபடு பூசல்” (பக் - 376, பா - மலைபடுகடாம்)

முடிவுரை

இவ்வாறு சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்திலும் ஒலியானது முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒலியின் மூலம் பற்பல இசை பிறந்தது என்பன இதன் மூலம் அறியப்படுகின்றன. ஒலியானது காற்றின் அசைவுகளின் மூலம் வெளிப்பட்டு மனதினை வருடும் இன்னிசையாகப் பிறக்கிறது. ஆகவே ஒலியானது சங்க இலக்கியத்தில் சிறப்பாக அமையப் பெற்று பாடல்களின் வழியே ஒவ்வொருவரின் மனதில் நீங்கா இடம் பெற ஏதுவாக அமைகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p70.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License