இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சிறுபஞ்சமூலம் உணர்த்தும் நம்பிக்கைகள்

மு. கார்த்திகா

முன்னுரை

சிறுபஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர். மூலம் - வேர், சிறிய ஐந்து வேர்கள் என்பதே சிறுபஞ்சமூலம். கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் இவைகளே சிறுபஞ்சமூலம். இவ்வைந்தும் உடல் நோய்களைத் தீர்க்கும் மருந்து பொருட்கள். இந்நூலில் ஒவ்வொரு வெண்பாவிலும் சொல்லப்படும் ஐந்து பொருட்களும், மக்களின் மனப்பிணியைப் போக்கி மனதை முழுமையாகச் சுத்தமாக வைத்துப் பாதுகாக்கக் கூடியது. சிறுபஞ்சமூலத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எப்படி நம்பிக்கைகளாகக் கூறப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

நம்பிக்கைகள்

மனிதன் எதைச் செய்தல் வேண்டும், எதைச் செய்தல் கூடாது என்பதைச் சிறுபஞ்சமூலம் மக்களுக்கு நம்பிக்கை வாயிலாக உணர்த்துகிறது.

வீடுபேறு அடைதல்

கடவுளால் சொல்லப்பட்ட நூல்கள் முதல் நூல்கள் ஆகும். அந்நூல்களில் கூறப்படும் அறக்கருத்துக்களைப் பின்பற்றி நடப்பவன் தவசி ஆவான் என்பதைச் சிறுபஞ்சமூலம் கூறுகிறது.

“பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
முற்றினான் ஆகும் முதல்நூல்-பற்றினால்
பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி.”

பற்று இல்லாதவனாகிய இறைவனால் செய்யப்பட்ட முதல் நூலைக் கடைபிடித்து ஒழுகுகின்றவன், வீடுபேற்றை விரும்பி ஏற்கின்ற தவசியாவான் என்கிறது.



குடிப்பதற்கு நீர்; தங்குவதற்கு நிழல்; இருப்பதற்கு இடம்; உண்பதற்கு உணவு ஆகியவைகளைக் கொடுப்போரும், அன்னசாலை அமைப்போரும் பேரின்பத்தை அடைவார்கள். இதனைச் சிறுபஞ்சமூலம்,

“நீரறம் நன்று நீழல்நன்று தன்னிலு
பாரறம்நன்று பாத்(து) உண்பானேல்-பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும் போகம்
ஒன்றுமாம் சால வுடன்.”

நா எழாத செயல்கள்

ஒருவருக்காகப் பரிந்து பொய்சாட்சி சொல்லுகின்றவர்களுடைய நாக்கு அறுந்துவிடும். ஆதலால் பொய்சான்று கூறுதல் தீமை என்கிறது. அதுமட்டுமன்று எதற்கெல்லாம் நாவானது எழாது என்பதையும் எடுத்துரைக்கின்றது.

“கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோவான் நாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்
கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சாம் உணர்ந்து”

உயிர்களைக் கொன்று உண்பவணுடைய நாக்கு அறுந்துவிழும், கற்றறிந்த சான்றோர் முன்னிலையில் கல்வியறிவில்லாதவனுடைய நாக்கு அடங்கிவிடும். கடன் தந்தவனைக் கண்டதும் நாக்கு எழாது என்று சிறுபஞ்சமுலம் உணர்த்துகிறது.



நீண்டநாள் வாழ்பவர்கள்

முற்பிறப்பில் மற்றவர்களுடைய நோய்களைத் தீர்த்தவர்கள் இப்பிறப்பில் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்கிறது.

“சிக்கர் சிதடர் சிதலைப்போல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும் இன்றி வாழ்வார்”

தலை நோயுடையவர், பித்தர், வாய்ப்புற்று உடையவர், மூலநோய் கொண்டவர், இவர்களை வருத்துகின்ற நோய்களை முற்பிறப்பில் தீர்த்தவர்கள். இப்பிறப்பில் எந்தவித நோயும் இல்லாமல் வாழ்வார்கள் என்கிறது இப்பாடல். பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பிறருக்குக் கொடுத்து உண்பவன், தன் செல்வத்தால் பிறருக்கு உதவி செய்பவன், போர்க்களத்தில் அஞ்சாமல் நின்று பகைவர்களை அழித்துப் படையைக் காப்பவன், ஒவ்வொரு நாளும் பிறருக்கு உணவிட்ட பின் தான் உண்பவன், பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் இவர்கள் எண்பது வயதுக்கு மேலும் வாழ்வார்கள் என்று சிறுபஞ்சமூலம் பாடல் கூறுகிறது.

“பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்
அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதே
உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின் மேலும்வாழ் வான்.



நாள் பார்த்தல்

திருமணம் முதலிய நல்ல செயல்களைச் செய்வதற்கு நாள், முகூர்த்தம், கிரகம், யோகம் இவைகளைப் பார்த்துப் பின் இவைகளின் பலனையும் அறிந்து செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையைச் சிறுபஞ்சமூலம் பாடல் கூறுகிறது.

“நான் கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம் அக்
கோன் கூட்டம் யோகம் குணனுணர்ந்து - தோள்கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்
பெற்றால் நாள்கொள்க பெரிது.”

நாள் பொருத்தம், முகூர்த்தம் அவற்றுடன் தோளின் பொருத்தம் மற்றும் யோகமும், இவற்றால் உண்டாகின்ற நன்மையை ஆராய்ந்து பொருந்திய நாளைப் பெற்றால் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறது.

மேலும் புலால் உண்ணாதவர்கள் சுவர்க்கம் பெறுவார்கள்,மோட்சம் அடைவார்கள் என்றும் கூறுகிறது. புலால் உண்ணுதல் கூடாது என்பதைச் சிறுபஞ்சமூலத்தின் பல பாடல்களில் கூறப்பட்டிருக்கின்றன. சிறு பஞ்சமூலத்தில் இதுபோன்று எத்தனையோ நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

முடிவுரை

மனித வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்தால், என்ன பயன் கிடைக்கும்? என்பது போன்ற பல நல்ல கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, மனிதன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறநெறிகளையும், அதனால் அவனுக்குக் கிடைக்கும் நல்வாழ்க்கையையும் சிறுபஞ்சமூலம் தன்னிடத்தே கொண்டிருக்கிறது. சிறுபஞ்சமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் நற்கருத்துகளை நம் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து நல்வாழ்க்கையைப் பெறலாமே...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p71.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License